Last Updated : 27 Sep, 2016 05:11 PM

 

Published : 27 Sep 2016 05:11 PM
Last Updated : 27 Sep 2016 05:11 PM

முதல் விவாதத்தில் அசத்தியது யார்?- கருத்துக் கணிப்பில் டிரம்ப்பை வீழ்த்திய ஹிலாரி!

அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் பங்குகொண்ட முதல் விவாதம் குறித்த தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு முடிவுகள் ஹிலாரிக்கு ஆதரவாக அமைந்துள்ளன.

அமெரிக்க அதிபராவதற்கு ஹிலாரிக்கு ஆதரவாக 68%, டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக 27% பேர் வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான ஹிலாரி - டிரம்ப் பங்கேற்ற நேரடி விவாதம் நியூயார்க் நகரின் ஹாஃப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை நடந்தது.

90 நிமிடங்கள் வரை இந்த விவாதம் நீடித்தது. இவ்விவாதத்தில், நடுத்தர வர்க்க மக்களுக்கான வரி விதிப்பு, அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம், ஐ.எஸ். எதிர்ப்பு நடவடிக்கை, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விவாதத்தை தொலைக்காட்சியில் பார்த்த மக்களிடம் சிஎன்என்/ஓஆர்சி தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரிக்கு ஆதரவாக 68% வாக்களித்து தங்களது பேராதரவை தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்புக்கு ஆதரவாக 27% மட்டுமே வாக்களித்துள்ளனர்.

விவாதத்தின் முடிவில் நடந்த கருத்துக் கணிப்பு முடிவுகள்

ஹிலாரியை சிறந்த தலைவர் என்று 56% பேரும், டிரம்பை சிறந்த தலைவர் என 39% பேரும் வாக்களித்துள்ளனர்.

ஹிலாரி அதிபாரக தேர்தெடுக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவார் என 53% பேரும், டிரம்புக்கு ஆதரவாக 40% பேரும் வாக்களித்துள்ளனர்.

ஹிலாரியின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஆதரவாக 63% பேரும், டிரம்பின் வெளியுறவு கொள்கைகளுக்கு ஆதரவாக 35% பேரும் வாக்களித்துள்ளனர்.

தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஹிலாரிக்கு ஆதரவாக 54% பேரும், டிரம்புக்கு ஆதரவாக 43% பேரும் வாக்களித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x