Published : 04 Oct 2015 12:30 PM
Last Updated : 04 Oct 2015 12:30 PM

நிலவின் புதிய படங்களை வெளியிட்டது நாசா

நிலவில் மனிதன் முதல்முறையாக தரையிறங்கியபோது எடுக்கப் பட்ட 8400 புதிய படங்களை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கடந்த 1969 ஜூலை 20-ம் தேதி நாசாவின் அப்பல்லோ விண்கலம் நிலவில் தரையிறங்கியது. நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் முதல் காலடியை எடுத்து வைத்தார். அடுத்து எட்வின் ஆல்ட்ரின் நிலவில் கால் பதித்தார். இருவரும் நிலவில் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் நடந்தனர்.

இருவரின் உடைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட் டிருந்தன. அதன்மூலம் ஆயிரக் கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அந்தப் புகைப் படங்களை அதிநவீன முறையில் டிஜிட்டல்மயமாக்கும் பணி 2004-ம் ஆண்டில் தொடங்கப் பட்டன. தற்போது நவீனப்படுத் தப்பட்ட 8400 புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x