Last Updated : 26 Feb, 2017 12:24 PM

 

Published : 26 Feb 2017 12:24 PM
Last Updated : 26 Feb 2017 12:24 PM

தற்கொலை படை தாக்குதலில் சிரியாவில் 42 பேர் பலி

சிரியாவின் ஹாம்ஸ் நகரில் பாது காப்பு மற்றும் ராணுவப் புலனாய்வு தலைமை அலுவலகம் அருகே நேற்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. 6 தீவிர வாதிகள் இப்பகுதியில் ஊடுருவியதாகவும் இவர்களில் பலர், அடுத்தடுத்து தங்கள் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் உளவுத் துறையின் மூத்த அதிகாரி உட்பட 42 பேர் உயிரிழந்தர். மேலும் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

ஹாம்ஸ் நகரம் கடந்த 2014 மே மாதம் முதல் அரசின் முழுக் கட்டிப்பாட்டில் உள்ளது. ஐ.நா. தலையீட்டினால் உருவான உடன்படிக்கையின் அடிப்படையில் கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து வெளியேறியதால் இந்நகரம் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

என்றாலும் அப்போது இந்நகரில் அடிக்கடி குண்டுவெடிப்பு நிகழ் கிறது. கடந்த ஆண்டு தொடக் கத்தில் இந்நகரில் நிகழ்ந்த இரட்டை தாக்குதல்களில் 64 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவின் அல்-பாப் நகருக்கு அருகில் நேற்று முன்தினம் இரு கார் வெடிகுண்டு தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x