Last Updated : 26 Oct, 2016 03:29 PM

 

Published : 26 Oct 2016 03:29 PM
Last Updated : 26 Oct 2016 03:29 PM

குவைத்: மனைவியை ஏமாற்றிய கணவனை காட்டிக் கொடுத்த வீட்டுக் கிளி

மனைவியை ஏமாற்றிய கணவனை வீட்டுக் கிளி ஒன்று காட்டிக் கொடுத்த சம்பவம் வளைகுடா நாடுகளுள் ஒன்றான குவைத்தில் நடந்துள்ளது.

இச்செய்தி அந்நாட்டிலிருந்து வெளியாகும் 'அராப் டைம்ஸ்' செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.

தனது கணவனுக்கும் வீட்டு பணிப் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என மனைவிக்கு நீண்ட நாளாக சந்தேகம் இருந்துள்ளது. ஆனாலும், அந்த சந்தேகத்தை மனைவியால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அந்தப் பெண் வீட்டில் செல்லமாக வளர்த்த கிளி அவருக்கு உதவியிருக்கிறது.

அப்பெண்ணின் கணவரும், வீட்டுப் பணிப் பெண்ணும் பேசிக் கொண்ட சில அந்தரங்க வார்த்தைகளை கிளி அப்படியே பேசிக் காட்டியுள்ளது. இதனால் தனது சந்தேகம் உறுதியான நிலையில் அப்பெண் ஒருநாள் வழக்கமாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் நேரத்திலிருந்து சற்று முன்னதாகவே வீட்டுக்குவர கணவர் மாட்டிக் கொண்டுள்ளார்.

உடனடியாக கணவர் மீது அப்பெண் ஹவாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் போலீஸாரோ, "கிளியின் சாட்சி நம்பத்தகுந்ததாக நீதிமன்றத்தில் ஏற்கப்படாது. ஒருவேளை எதிர்தரப்பு வழக்கறிஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ அல்லது வானொலி நிகழ்ச்சியை கேட்டோ அந்த வார்த்தைகளை கிளி பேசியிருக்கிறது என வாதிட்டால் வழக்கு எடுபடாமல் போய்விடும்" எனக் கூறி வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

கிளியின் சாட்சி எடுபடாது என்பதால் கடுமையான தண்டனையில் இருந்து அந்த கணவர் தப்பித்துக் கொண்டார். இருந்தாலும் மனைவியின் சந்தேகம் உறுதியானது.

வளைகுடா நாடுகளில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபடுவது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x