Last Updated : 29 Jan, 2015 03:02 PM

 

Published : 29 Jan 2015 03:02 PM
Last Updated : 29 Jan 2015 03:02 PM

இந்தியாவுடான நல்லுறவு அவசியம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

21-ஆம் நூற்றாண்டு வளமானதாக அமைய இந்தியா - அமெரிக்கா இடையே ஆன உறவு மிகவும் அவசியமானது என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் சபையின் உறுப்பினர் ஜோசப் க்ரோலே, இரு நாடுகளுக்கு இடையே ஆன உறவை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கடந்த 27-ஆம் தேதி முன்மொழிந்தார்.

அதில், "21-ஆம் நூற்றாண்டு வளம் மிக்கதாக இருக்க இந்தியா - அமெரிக்கா இடையே ஆன உறவு அவசிமானாது. அரசியல் உறுதிபாட்டுடனும், ஜனநாயகத்துடனும் இந்த இரு நாடுகளைப் போல வேறு எவராலும் செயல்பட முடியாது. கடந்த 10 ஆண்டுகளின் இரு நாடுகளும் பல விஷயங்களில் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு வருகிறது.

பாதுகாப்பை வலுப்படுத்துதல், சர்வதேச பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, கல்வி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்றவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு காங்கிரஸ் சபையில் இடம்பெற்றிருக்கும் அமெரிக்க வாழ் இந்தியரான எமி பரா, க்ராளே உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்தத் தீர்மானம் முழுமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் வடிவம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்திய குடியரசு தினவிழாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் அந்நாட்டு காங்கிரஸ் சபையின் உறுப்பினர் க்ராளே உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவினரும் வந்திருந்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரம் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x