Published : 22 Nov 2014 11:47 AM
Last Updated : 22 Nov 2014 11:47 AM

இந்திய பயணத்தின்போது காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச ஒபாமாவிடம் நவாஸ் ஷெரீப் வலியுறுத்தல்

இந்தியப் பயணத்தின்போது காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசுமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.

ஒபாமா, வரும் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்நிலையில் ஒபாமா தனது இந்தியப் பயணம் குறித்த தகவலை நவாஸ் ஷெரீபுடன் நேற்று முன்தினம் இரவு தொலைபேசி மூலம் பகிர்ந்துகொண்டார். இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் அவர்கள் பேசினர்.

அப்போது, "இந்திய வருகை யின்போது காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்தியத் தலைவர்களுடன் பேசவேண்டும். இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதன் மூலம் ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, பொருளாதார ஒத்து ழைப்பு மேம்படும்" என்று ஒபாமா விடம் நவாஸ் ஷெரீப் கூறினார்.

"இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த ஆண்டு மே மாதம் நான் புதுடெல்லி சென்றேன். ஆனால் வெளியுறவு செயலர்கள் அளவிலான பேச்சுவார்த் தையை ரத்து செய்தது, எல்லையில் தாக்குதல் நடத்தி, பொதுமக்கள் பலியாவதற்கு காரண மாக இருந்தது போன்ற துரதிருஷ்டவ சமான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது" என்றும் நவாஸ் ஷெரீப் குற்றம் சாட்டினார்.

இந்தியாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் ஆனால் இதற்கு உகந்த சூழ்நிலையை இந்தியா தான் ஏற்படுத்த வேண்டும் என்றும் நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டார். இவற்றை தான் கவனத்தில் கொள்வதாக ஒபாமா கூறினார்.

பாகிஸ்தான் வருமாறு தான் ஏற்கெனவே அழைப்பு விடுத்த தையும், அமெரிக்க அதிபரின் பயணத்தை பாகிஸ்தான் மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் நவாஸ் ஷெரீப் கூறினார். இதற்கு பாகிஸ்தானில் நிலைமை சீரானவுடன் அந் நாட்டுக்கு வருவ தாக ஒபாமா உறுதி அளித்தார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியின் சமீபத்திய பாகிஸ்தான் பயணத்தை தொடர்ந்து அந்நாட்டுடன் உறவு மேம்பட்டுள்ளதாகவும் நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டார். பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக் கைகளை மேற்கொள்வதில் தாங்கள் மிகவும் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா வும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதா வது: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிபர் ஒபாமா பேசினார். அப்போது இரு நாடுகளின் பொது நலன்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். பாதுகாப்பு மற்றும் செழுமைமிக்க பாகிஸ்தானை ஏற்படுத்துவதற்கு இருதரப்பும் தொடர்ந்து பாடுபடுவது என்று முடிவு செய்தனர். இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை மிகவும் மதிப்பதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். ஆப்கானிஸ்தானில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுடன் பாகிஸ்தான் அரசு இணக்கமான போக்கை கடைப்பிடித்து நட்புறவை மேம்படுத்தியுள்ளதற்கு நவாஸ் ஷெரீபுக்கு ஒபாமா பாராட்டு தெரிவித் தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x