Last Updated : 04 Mar, 2015 08:46 AM

 

Published : 04 Mar 2015 08:46 AM
Last Updated : 04 Mar 2015 08:46 AM

அமெரிக்க பள்ளியில் இனவெறி: சீக்கிய சிறுவனை தீவிரவாதி என கேலி செய்யும் சக மாணவர்கள் - இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு

அமெரிக்க பள்ளி ஒன்றில் சீக்கிய சிறுவனை சக மாணவர்கள் ஆப்கானிஸ்தான் தீவிரவாதி என்று கூறி கேலி செய்யும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இணையத்தில் வெளியாகி யுள்ள அந்த வீடியோவை இது வரை ஒன்றரை லட்சம் பேர் பார்த்து கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

மாணவர்கள் மனதில் இனவெறி எனும் நஞ்சை விதைக்கும் இது போன்ற இனவெறி செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

பள்ளி வாகனத்தில் கேலி

ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள பள்ளி வாகனத்தில் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 12 வயதாகும் அந்த சீக்கிய சிறுவனின் பெயர் ஹர்சுக் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பள்ளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவனின் பின்னால் அமர்ந்திருக்கும் அவனை விட வயதில் மூத்த மாணவி ஒருவர் அவனை சுட்டிக்காட்டி தீவிரவாதி, தீவிரவாதி என்ற கேலியாக கூறுகிறார்.

அப்போது அந்த சிறுவன் தலையை குனிந்தபடி அமர்ந் துள்ளான். இதையடுத்து வேறு சில மாணவர்களும் அவனை நோக்கி கையை நீட்டி தீவிரவாதி என்று கேலி செய்கின்றனர். பின்லேடன் என்றும், உனது நாட்டுக்கு திரும்பிப் போ என்றும் சிலர் அவனை நோக்கி கூறுகின்றனர்.

நான் தீவிரவாதி இல்லை..

அந்த வீடியோவை அந்த சீக்கிய சிறுவன்தான் இணையத்தில் பதி வேற்றம் செய்துள்ளார். அதில் என்னை ஆப்கானிஸ்தான் தீவிர வாதி என்று கூறி இனவெறியுடன் சக மாணவர்கள் கேலி செய்கின்றனர். என்னை போன்ற சிறுவர்களை இப்படி நடத்தாதீர்கள். நான் தீவிர வாதி அல்ல, சீக்கிய இனத்தை சேர்ந்தவன் என்று கூறுகிறான்.

காரணம் என்ன?

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் உட்பட பல தீவிர வாதிகள் தலைப்பாகை அணிந் துள்ளனர். அவர்களை டி.வி., செய்தித்தாள்களில் பார்க்கும் வெளிநாட்டவர்கள் பலரது மனதில் தலைப்பாகை அணியும் சீக்கியர் களும் அவர்களை சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் பதிந்துள்ளதுதான் இதற்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது.

அமெரிக்காவில் இந்தியர் களுக்கு எதிராக முக்கியமாக சீக்கியர்களுக்கு எதிராக சமீபகால மாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

சீக்கிய அமைப்பு கண்டனம்

சீக்கிய சிறுவன் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் நல அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பள்ளியில் சீக்கிய மாணவர்கள் இதுபோன்ற இனவெறி செயல் களால் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளி நிர்வாகமும், மாணவர்களின் பெற்றோர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். சக மாணவனை இதுபோன்று கேலி செய்வது அவனது மனதை பாதிக்கும். நாளைய தலைமுறையை பொறுப்புடன் உருவாக்குவது பள்ளிகளில்தான் ஆரம்பமாகிறது. எனவே அங்கு நல்ல சூழ்நிலை நிலவ தேசிய அளவில் நடவடிக்கை வேண்டும் என்று சீக்கிய அமைப்பு கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x