Published : 23 May 2015 08:53 AM
Last Updated : 23 May 2015 08:53 AM

அதிகபட்ச தீவிரவாத தாக்குதல் அபாயத்தில் இரு இந்திய நகரங்கள்: மிதமான அபாய பட்டியலில் சென்னை

உலகில் தீவிரவாத தாக்குதல் அபாயம் அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் இம்பால் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இரு நகரங்கள் அதிகபட்ச தீவிரவாத தாக்குதல் அபாயம் உள்ள நகரங்களாக பட்டியிலிடப்பட்டுள்ளன. மொத்தம் 1,300 நகரங்கள் உள்ள இப்பட்டியலில் சென்னை உட்பட 113 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

வெரிஸ்க் மேப்பிள் கிராப்ட் என்ற நிறுவனம் தீவிரவாத தாக்குதல் அபாயம் உள்ள நகரங்கள், வர்த்தக பகுதிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், அதிகபட்ச தீவிரவாத தாக்குதல் அபாயம், அதிக அபாயம், மிதமான அபாயம், குறைந்த அபாயம் உள்ள நகரங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2014 பிப்ரவரிக்குப் பிறகு நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களின் அடிப்படையில் நகரங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

இதில், அதிகபட்ச அபாய முள்ள நகரங்களாக உலகம் முழுக்க 64 நகரங்கள் பட்டியிலிடப் பட்டுள்ளன. இவற்றில், இராக்கின் பாக்தாத், மொசூல், அல் ரமாடி, பாகுபாத், கிர்குக், அல் ஹில்லா ஆகிய நகரங்கள் முறையே முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளன. பாகிஸ்தானின் பெஷாவர் 7-வது இடத் தையும், குவெட்டா 9, ஹாஸு கேல் 10வது இடத்தையும் பிடித்துள்ளன. லிபியாவின் பெங்காஸி 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய நகரங்கள்

அதிகபட்ச தீவிரவாத தாக்குதல் அபாயம் உள்ள நகரங்கள் பட்டியலில் இம்பால் (32), நகர் (49) ஆகிய இரு இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு அடுத்தபடியாக சென்னை 176-வது இடத்தில் மிதமான தாக்குதல் நடைபெறும் நகரங்கள் பட்டியலில் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 113 நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பெங்களூரு (204), புணே (206), ஹைதராபாத் (207), நாக்புரி (210), கொல்கத்தா (212), மும்பை (298), டெல்லி (447) ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இதர முக்கிய இந்திய நகரங்கள் ஆகும்.

லண்டன் 400-வது இடத்தையும், பாரிஸ் 97-வது இடத்தையும் பிடித்துள்ளன.

எகிப்து, இஸ்ரேல், கென்யா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறும் தாக்கு தல்கள் அந்நாடுகளின் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட வற்றைப் பாதிக்கும் வகையில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x