Published : 29 Jun 2018 08:40 AM
Last Updated : 29 Jun 2018 08:40 AM

உலக மசாலா: வரலாறு முக்கியமென்று தெரியாதா?

ஸ்

பெயினைச் சேர்ந்த தேவாலயம் ஒன்றில், 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களை மராமத்துச் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரியச் சின்னங்களைப் பராமரிக்கும் நிபுணர்களிடம் அந்தப் பொறுப்பை வழங்காமல், கைவினை ஆசிரியரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்தச் சிற்பங்களுக்கு பெயிண்ட் மூலம் வண்ணம் அடித்து, உடைந்த தலைக்கவசத்தைப் புதிதாக உருவாக்கி, குதிரையையும் சரி செய்து வைத்துவிட்டார். பழுதடைந்திருந்தாலும் அந்தச் சிற்பங்களில் அழகும் பாரம்பரியமும் நிரம்பியிருந்தது. ஆனால் மராமத்துக்குப் பிறகு கார்ட்டூன் கதாபாத்திரங்கள்போல் இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் கொதித்தெழுந்துவிட்டனர். சமூக வலைதளங்களில் இந்தப் படங்கள் வைரலாகிவிட்டன. ‘‘தூய ஜார்ஜ் சிலை சேதமடைந்திருப்பதால், அதை மராமத்துச் செய்து பாதுகாக்க முடிவெடுத்தோம். ஆனால் தேவாலயம் வரலாற்று முக்கியத்துவம் அறியாத ஒரு ஆசிரியரிடம் இந்தப் பணியைக் கொடுத்து, பாழாக்கிவிட்டது. பெயிண்ட் அடித்து கேலிக்கூத்தாக்கி விட்டனர்” என்கிறார் நகர மேயர்.

வரலாறு முக்கியமென்று தெரியாதா?

சீ

னாவைச் சேர்ந்த 31 வயது நியு ஸியாங்ஃபெங், திருமணம் செய்து கொள்வதற்காகப் பெண் தேடி 8 ஆண்டுகளாக அலைகிறார். இதுவரை 80 ஆயிரம் பெண்களிடம் திருமணக் கோரிக்கையை வைத்திருக்கிறார். ஆனால் ஒருவர் கூட இவரைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை! “8 ஆண்டுகளுக்கு முன்பு பெண் தேட ஆரம்பித்தேன். உறவினர்களிடம் பெண் கேட்டேன், நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலம் முயற்சி செய்தேன். பிறகு பத்திரிகைகள், இணையதளங்களில் விளம்பரங்களைப் பார்த்து முயற்சி செய்தேன். அதிலும் அமையாததால், ஒரு அட்டையில் எழுதி கையில் எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன்.பேருந்து, ரயில் பயணங்களில், கடைகளில், உணவகங்களில், பூங்காக்களில் எல்லாம் பெண்களைப் பார்த்தவுடன் அட்டையைத் தூக்கிக் காட்டுவேன். சிலர் சிரித்துக்கொண்டே செல்வார்கள். சிலர் முறைத்துக்கொண்டு செல்வார்கள். ஒரு சிலர் என்னிடம் பேசுவார்கள். ஒரு சில சந்திப்புகளில் விலகிச் சென்றுவிடுவார்கள்.

இந்தத் தேடல் குறித்து 2013-ம் ஆண்டிலேயே தேசிய அளவில் செய்திகள் வெளிவந்துவிட்டன. 5 ஆண்டுகளுக்குப் பிறகும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். கணவனை இழந்த, விவாகரத்து ஆன பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தேன். அவர்களும் நல்ல சம்பளமும் சொந்த வீடும் எதிர்பார்க்கிறார்கள். எனக்கு ஓரளவு வருமானம் இருந்தாலும் சொந்த வீடு இல்லை. அதனால் பலரும் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். இன்னும் சிலர் இன்றைய இளைஞர்கள்போல் நான் மென்மையாக, அழகாகக் காதலை வெளிப்படுத்துவதில்லை என்கிறார்கள். 80 ஆயிரம் பெண்களால் நிராகரிக்கப்பட்டவன் என்பதை இந்த உலகம் நம்ப மறுக்கிறது” என்கிறார் நியு ஸியாங்ஃபெங். 80 ஆயிரம் பேரைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை, அவர்களில் இருந்து ஒரு பெண் கூட கிடைக்கவில்லை என்பது நம்ப முடியாதது. இவர் விளம்பரத்துக்காக இதைச் செய்கிறார் என்கிறார்கள்.

விளம்பரத்துக்காக இப்படிச் செய்யலாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x