Last Updated : 28 Jun, 2018 09:00 AM

 

Published : 28 Jun 2018 09:00 AM
Last Updated : 28 Jun 2018 09:00 AM

சிங்கப்பூரில் ட்ரம்ப்புக்கு உறுதி அளித்தாலும் அணு ஆராய்ச்சிக் கூடத்தை மேம்படுத்துகிறது வடகொரியா: செயற்கைகோள் படங்கள் மூலம் அம்பலம்

‘‘சிங்கப்பூரில் அதிபர் ட்ரம்ப்புக்கு உறுதி அளித்திருந்தாலும், வடகொரியா தொடர்ந்து தனது அணு ஆராய்ச்சிக் கூடத்தை மேம்படுத்தி வருகிறது’’ என்று செயற்கைகோள் படங்கள் ஆதாரத்துடன் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை அழிப்பதற்கு கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டார். இது உலகளவில் வரவேற்கப்பட்டது. எனினும், எல்லா அணு ஆயுதங்களையும் அழிக்கும்வரை வடகொரியா மீதான பொருளாதாரத் தடை நீடிக்கும் என்று அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்நிலையில், வடகொரியா வின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும், ‘38 நார்த்’ என்கிற இணையதளம், வடகொரியா தொடர்ந்து அணு ஆராய்ச்சிக் கூடத்தை மேம்படுத்தி வருவதாகக் கூறியுள்ளது.

இதுகுறித்து ‘38 நார்த்’ இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

வடகொரியாவின் முக்கிய மான யாங்பையான் அணு ஆராய்ச்சி கூடத்தில் பணிகள் நடப்பதுடன், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. வர்த்தக செயற்கைகோள் மூலம் கடந்த ஜூன் 21-ம் தேதி முதல் பெறப்பட்ட புகைப்படங்கள் அதை உறுதி செய்கின்றன.

மேலும், அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளும், அணு உலை, இன்ஜினீயரிங் அலுவலகம் போன்ற புதிய கட்டமைப்பு பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறு ‘38 நார்த்’ இணையதளம் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x