Published : 20 Jun 2018 08:22 AM
Last Updated : 20 Jun 2018 08:22 AM

உலக மசாலா: சகிப்புத்தன்மையற்ற செயல்

மெ

க்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்த ட்ரம்ப் அரசு, அதைத் தற்போது அமல்படுத்தி வருகிறது. கடந்த 6 வாரங்களில் 2 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். பெற்றோர் கைது செய்யப்பட்டு ஓரிடத்திலும் குழந்தைகள் பல்வேறு முகாம்களிலும் அடைக்கப்பட்டுள்ளன. புலிட்சர் விருது வென்ற ஒளிப்படக் கலைஞர் ஜான் மூர், “மிகச் சிறிய குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதும் குழந்தைகளின் ஓலமும் என் இதயத்தை நொறுக்கிவிட்டது. எல்லைப் பிரச்சினையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் சகிப்புத் தன்மையற்ற செயலை இது காட்டுகிறது. அம்மாவிடமிருந்து பிரிக்கப்பட்ட துயரத்தை வெளிப்படுத்தும் குழந்தைகளை என்னால் படம் பிடிக்கவே முடியவில்லை. அந்தக் குழந்தைகளின் அழுகை அசாதாரணமாக இருந்தது. பெற்றோரும் இனி எப்போது குழந்தைகளைப் காணப் போகிறோம் என்ற பயத்துடன் இருந்ததைப் பார்க்க முடிந்தது. பல ஆயிரம் மைல்கள் பயணம் மேற்கொண்டு, அடைக்கலம் தேடி வரும் மக்களை இன்னும் மோசமான துயரத்தில் தள்ளிவிடுகிறது ட்ரம்ப் அரசு. அங்கிருந்து வந்தபிறகே என்னால் மூச்சு விட முடிந்தது” என்கிறார். அமெரிக்க வரலாற்றில் இது மோசமான செயல் என்று லாரா புஷ், மிஷேல் ஒபாமா உட்பட பலரும் கண்டித்திருக்கிறார்கள்.

மனிதாபிமானமற்ற, சகிப்புத்தன்மையற்ற செயல்!

னடாவைச் சேர்ந்த 12 வயது ஆலிவர் ரியோக்ஸ், 6 அடி 11 அங்குல உயரம் இருக்கிறார்! கூடைப்பந்து விளையாட்டு வீரராக இருக்கும் ஆலிவர், அவரது அணியின் சொத்தாக மதிக்கப்படுகிறார். தன் வயது குழந்தைகளை விட 2 அடி உயரமாக இருக்கிறார். பாதங்களைச் சிறிதும் தூக்க வேண்டிய அவசியம் இல்லாமல், 8 அடி உயரம் உள்ள கூடைக்குள் பந்தைப் போட்டு விடுகிறார். பாய்ந்து செல்லும் பந்தைக் கையால் திசைத் திருப்புகிறார், பிடிக்கிறார். இதனால் இவரது அணி எளிதில் வெற்றி பெற்றுவிடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் ஆலிவரின் அணி அதிகமான வெற்றிகளைப் பெற்று, பாராட்டுகளை அள்ளி வருகிறது. இப்போது ஆலிவரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. ‘ஒரே உயரம் கொண்ட குழந்தைகளுடன்தான் போட்டி நடத்த வேண்டும். அசாதாரணமான உயரம் கொண்ட ஒருவருடன் அவரது இடுப்பு உயரமே இருக்கும் குழந்தைகள் விளையாடுவதில் நியாயமே இல்லை. ஆலிவரால் இந்த அணி வெற்றி பெறுவதை ஒரு வெற்றியாகக் கருத முடியாது’ என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். “ஆலிவர் அளவுக்கு அதிகமான உயரத்துடன் இருந்தாலும் அவருக்கு 12 வயதுதான் ஆகிறது. அவர் ஒரு குழந்தை. அவரிடம் பேசிப் பாருங்கள், சிறுவனுக்குரிய குணங்கள்தான் இருக்கும். உயரத்தைக் காரணம் காட்டி, அவரது திறமையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. உயரம் என்பதற்காக இவரைப் பெரியவர்கள் அணியில் சேர்க்க முடியுமா? கூடைப் பந்து விளையாடக் கூடாது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்கிறார் ஆலிவரின் பயிற்சியாளர்.

ஆலிவர் என்ன செய்வார், பாவம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x