Last Updated : 17 Jun, 2018 04:19 PM

 

Published : 17 Jun 2018 04:19 PM
Last Updated : 17 Jun 2018 04:19 PM

சீனா, இலங்கை மக்கள் மந்த புத்தி உள்ளவர்கள்‘‘ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அதிர்ச்சியூட்டும் பயண குறிப்பு

ஜெர்மன் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சீன மக்களைப் பற்றியும் இலங்கை மக்களைப் பற்றியும் தனது நாட்குறிப்பில் இனவெறி கருத்துக்களை முன்வைத்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்அந்த நாட்குறிப்பில், ஐந்து மாதங்களில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், பாலஸ்தீனம் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்துவந்தது பற்றிய தகவல்கள் உள்ளன.

அதில் சீனா. ''விசித்திரமான மந்தைபோன்ற ஒரு நாடு. நாட்டில் உள்ளவர்களில் பெரும்பாலும் தான்தோன்றித்தனமாக இருப்பவர்கள்தான் அதிகம்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தனைக்கும் அவர் அதன்பின்னர் தனது வாழ்க்கையில் நிறவெறி என்பது ''வெள்ளையின மக்களின் ஒருவித நோய்'' என்றும் அழைத்துள்ளார். அமெரிக்காவில் சிவில் உரிமை இயக்கத்தின் ஒரு சாம்பியனாகவும் அவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், முதன்முறையாக ஜெர்மனியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள 'ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பயண நாட்குறிப்புகள்' எனும் இந்நூலில் தூர கிழக்கு நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஆரம்பத்தில் பயணம் மேற்கொண்டபோது இவ்வாறு அவர் கருத்துக்கொண்டிருக்கவில்லை என்பதையும் காணமுடிகிறது.

''சீனர்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இல்லை. ஆனால் தோட்டங்களில் காலைக்கடன் கழிப்பவர்களைப்போல குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பார்கள். இவை அனைத்தும் மிகவும் அமைதியாகவும் மெதுவாகவும் நடைபெறுகிறது. குழந்தைகள்கூட சுறுசுறுப்பின்றியும் மந்தத்தன்மையோடும் இருக்கிறார்கள்.'' என்று எழுதியுள்ளார்.

இலங்கையில் பயணம் செய்யும்போது, ''இலங்கை மக்கள் மோசமான குப்பையிலும் தரைமட்டமாக அதிக துர்நாற்றத்திற்கிடையிலும் வாழ்கிறார்கள். அவர்கள் கொஞ்சமாக உழைக்கிறார்கள். சிறிதளவே தேவையை கொண்டிருக்கிறார்கள். எளிய பொருளாதார சுழற்சியிலே வாழ்க்கையில் அவர்கள் உழல்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த விஞ்ஞானி ஜப்பானியர்களைப் பற்றி குறிப்பிடும்போது மட்டும் அன்போடு, "தனித்துவமான, ஒழுக்கமான, மிகவும் கவர்ச்சிகரமானவர்கள்" என்று கூறியிருக்கிறார்.

இந்த நாட்குறிப்புகளைப் பற்றி தெரிவித்த பதிப்பகத்தார், ''ஐன்ஸ்டீனின் உலகம் முழுவதும் உள்ள அவரது உறுப்பினர்கள் அவரது இனம் சார்ந்த அணுகுமுறைகளைப் பற்றி ஒரேவிதமாக கேள்விகளை எழுப்பியுள்ளதையும் இந்நூலின் சில பகுதிகள் வெளிப்படுத்தியுள்ளன.'' என்று தெரிவித்துள்ளனர்.

இந்நூலின் பதிப்பாசிரியர், செவ்எவ் ரோஸென்கிரான்ஸ் இதுகுறித்து கூறுகையில், அழகான விரும்பத்தகாத கருத்துக்களை ஐன்ஸ்டீன் உருவாக்கிக்கொண்டுள்ளார்.

இதனால் அவருக்கு உள்ள மனிதாபிமான தோற்றத்திலிருந்தும் முரண்படுகிறார். தூர கிழக்கு நாடுகளில் உள்ள அம்மக்கள் புத்திசாலித்தனத்தில் தாழ்ந்திருந்தது அழகாக பரவியுள்ளது என்று குறிப்பிடுகிறார். இந்தக் கருத்துக்கள், இன்னமும் அதிர்ச்சியூட்டும்வை, குறிப்பாக நவீன வாசகருக்கு'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x