Last Updated : 24 May, 2018 06:34 PM

 

Published : 24 May 2018 06:34 PM
Last Updated : 24 May 2018 06:34 PM

எம்.எச்.17 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணைதான்: பன்னாட்டு விசாரணையில் அம்பலம்

ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தி 298 அப்பாவி மக்கள் பலியான விவகாரத்தில் ரஷ்ய ஏவுகணைதான் காரணம் என்று விசாரணைத்தரப்பினர் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

இது குறித்த விரிவான வீடியோ பகுப்பாய்வு அம்பலப்படுத்துவது என்னவெனில் எம்.எச்.17 மலேசிய பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஏவுகணை ரஷ்யாவின் ராணுவ யூனிட்டிலிருந்து செலுத்தப்பட்டதே என்பது தெரியவந்துள்ளதாக பன்னாட்டு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து நேஷனல் போலீஸ் வில்பர்ட் பாலிஸன் வியாழனன்று கூறியபோது, ரஷ்ய நகரான கர்ஸ்கிலிருந்து 53வது போர்விமானத் தாக்கு ஏவுகணைப் படை 53-ம் பிரிவிலிருந்துதான் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஜூலை 17, 2014, அன்று உலகை உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கிழக்கு உக்ரைன் வானில் இந்த பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணித்த 298 அப்பாவி உயிர்களும் பலியாகின.

ரஷ்யா தங்கள் ஏவுகணை அல்ல என்று தொடர்ந்து மறுத்துவந்த நிலையில் பன்னாட்டு விசாரணை இன்று விரிவான வீடியோ ஆய்வில் ரஷ்ய ஏவுகணைதான் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x