Published : 23 May 2018 09:07 AM
Last Updated : 23 May 2018 09:07 AM

உலக மசாலா: வாத்துக் குஞ்சுகளைத் தத்தெடுத்த நாய்

ங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டட் கோட்டையில் சமீபத்தில் ஒரு வாத்து 9 குஞ்சுகளைப் பொரித்தது. வாத்தும் குஞ்சுகளும் இரை தேடி சுற்றித் திரிந்ததை லாப்ரடார் நாய் ஒன்று கவனித்து வந்தது. கடந்த வாரம் திடீரென்று தாய் வாத்து காணாமல் போய்விட்டது. நரி தூக்கிச் சென்றிருக்கலாம் என்கிறார்கள். தாய் இன்றி தவித்த வாத்துக் குஞ்சுகளை நாய் அரவணைத்துக்கொண்டது. நாய் செல்லும் இடமெல்லாம் குஞ்சுகளும் கூடவே செல்கின்றன. நாய் தலை மீது ஏறி நிற்கின்றன. முதுகில் வரிசையாக அமர்ந்துகொண்டு வலம் வருகின்றன. “குஞ்சுகளிடம் நாய் போகும்போது முதலில் பயந்தோம். ஆனால் தாய் வாத்து இல்லாததை அறிந்து, குஞ்சுகளை அரவணைத்த விதம் கண்டு நெகிழ்ந்து போனோம். ஒரு தந்தையைப்போல் அக்கறையாக பொறுமையாக குஞ்சுகளைக் கவனிக்கிறது” என்கிறார் இந்தக் கோட்டையின் இயக்குநர் ஜெராமி கோல்ட்ஸ்மித்.

வாத்துக் குஞ்சுகளைத் தத்தெடுத்த நாய்!

ப்பானைச் சேர்ந்த நோபுகாஸு குர்கி, மலையேற்ற வீரர். 2012-ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் இறங்கினார். மோசமான வானிலை காரணமாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. நான்காவது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது, மிக மோசமான வானிலை மற்றும் உடல் நலப் பாதிப்பால் தன்னுடைய 9 விரல்களை இழந்தார். தன் தந்தையிடம் விரல்கள் இழந்த விஷயத்தைக் கூறியவுடன், “வாழ்த்துகள், விரல்கள் போனாலும் நீ உயிருடன் இருக்கிறாய் என்பது எவ்வளவு மகிழ்ச்சியானது” என்று மகனை உற்சாகப்படுத்தினார். ஆனாலும் எவரெஸ்ட் முயற்சியை அவர் கைவிடவில்லை. தொடர்ந்து ஏறிக்கொண்டிருந்தார். தற்போது 8-வது முறையாக எவெரெஸ்ட் உச்சிக்குச் செல்லும் முயற்சியில் கடுமையான வானிலையைச் சந்தித்தார். ஒரு நாள் இரவு தந்தையைத் தொடர்புகொண்டார். “இதுவரை நீங்கள் எனக்குக் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. மற்றவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துவிடுங்கள். நிலைமை மோசமாக இருக்கிறது. கடுமையான ஜுரம், இருமல்” என்றார். உடனே அவரது அப்பா மலையேறும் குழுவினரின் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். மீட்புக் குழுவினர் சென்று பார்த்தபோது காலம் கடந்திருந்தது. குர்கி இறந்து போய்விட்டார். இவரைப்போல் ஒரு தன்னம்பிக்கை மனிதரைப் பார்க்க முடியாது. “எவரெஸ்ட் உச்சியைத் தொடுவது முக்கியமும் இல்லை, சாதனையும் இல்லை. ஆனால் அதைத் தொடுவதற்கான முயற்சியில் எப்படி இருக்கிறேன் என்பதுதான் உண்மையிலேயே முக்கியமான விஷயம். அதைத்தான் வெளி உலகத்துக்குச் சொல்ல விரும்புகிறேன். சாதனையில் இல்லை உங்கள் வெற்றி, சாதனைக்கான முயற்சியில்தான் இருக்கிறது” என்று அடிக்கடி சொல்வார். இதுவரை தன்னுடைய மலையேற்ற அனுபவங்களை 2 புத்தகங்களாக எழுதி வெளியிட்டிருக்கிறார். இதுவரை 6 கண்டங்களில் மலை உச்சிகளை எட்டியிருக்கிறார்.

வரலாறாக மாறிப் போன மனிதர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x