Published : 17 May 2018 05:38 PM
Last Updated : 17 May 2018 05:38 PM

அச்சுறுத்தும் எபோலா வைரஸ்: காங்கோவில் 23 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதை  அந்நாட்டு சுகாதார மையம் உறுதி செய்துள்ளது.

எபோலா நோய் பரவல் தற்போது காங்கோவின் கிராமப்புறங்களில் கண்டறியப்பட்டுள்ளது. ஏபோலா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 44 பேரில்  இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். இவை நகரங்களிலும் பரவத் தொடங்கினால் அவற்றை கட்டுப்படுத்துவது கடினம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏபோலா நோய் பரவலைக் கட்டுப்படுத்த  உலக சுகாதார நிறுவனத்தால் மருந்துகள் காங்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதில்  எபாலோ வைரஸ் காய்ச்சலுக்கு 15,145 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 5,420 பேர் உயிரிழந்துள்ளனர்.

எபோலா வைரஸ்  மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. பின்னர் மனிதர்களுக்கிடையே பரவும் தொற்று நோயாக மாறுகிறது.

இதை மிஸ் பண்ணிடாதீங்க

மரபுசாரா மின்னாற்றல் திட்டங்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

‘கர்நாடக ஆளுநரின் முடிவு முட்டாள்தனமானது’- ராம்ஜெத் மலானி விளாசல்

ரசிக்க வைக்க காத்திருக்கும் ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x