Last Updated : 27 Apr, 2018 06:54 PM

 

Published : 27 Apr 2018 06:54 PM
Last Updated : 27 Apr 2018 06:54 PM

மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு: சிபிஐ அளித்த ஆதாரங்களை ஏற்றது லண்டன் நீதிமன்றம்

வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று, மோசடி செய்து லண்டனில் வசிக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடுகடத்துவது தொடர்பாக வழக்கில் சிபிஐ அளித்த ஆதாரங்களை லண்டன் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

62-வயதான விஜய் மல்லையா தனது கிங்பிஷர் விமான நிறுவனத்துக்காகவும், மதுபான நிறுவனத்துக்காகவும் வங்கிகளில் ரூ.9ஆயிரம் கோடி கடன் பெற்றார். அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்று அங்கு வாழ்ந்து வருகிறார். இவரை கைது செய்ய மும்பை, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன, ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்டுகளும் பிறக்கப்பட்டுள்ளன. தேடப்படும் குற்றவாளியாக மல்லையா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் பாஸ்போர்ட் முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துவரும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம், ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் மல்லையாவை கைது செய்து லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். ஆனால், ஒன்றரை மணிநேரத்தில் ஜாமீனில் மல்லையா வெளியேவந்தார்.

அதன்பின் கடந்த மார்ச் 16-ம் தேதி நடந்த விசாரணையின் போது, வெஸ்ட்மினிஸ்டர் நீதிபதி கூறுகையில், இந்திய வங்கிகள் அனைத்தும் விதிமுறைகள் அனைத்தையும் தகர்த்து மல்லையாவுக்கு கடன் அளித்துள்ளன எனக் கண்டித்த நீதிபதி, மல்லையாவை நாடு கடத்த அனுமதி மறுத்தார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், மல்லையாவை நாடு கடத்தும் வழக்கின் விசாரணை இன்று வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி எம்மா ஆர்பத்நாட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்துக்கு விஜய் மல்லையாவும் அவரின் வழக்கறிஞர் கிளார் மான்டிகோமரே ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள்.

சிபிஐ தரப்பிலும், விஜய் மல்லையா தரப்பிலும் நீதிமன்றத்தில் தங்கள் தரப்புவாதத்தை எடுத்து வைத்தனர். இதில் விஜய் மல்லையாவுக்கு எதிராக ஏராளமான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. முன்னதாக இந்த ஆவணங்களை ஏற்காத நீதிபதி இந்த முறை ஆவணங்களை ஏற்றுக்கொண்டார்.

அதன்பின் விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு நீதிபதி எம்மா ஆர்பத்நாட் ஒத்திவைத்தார். அன்று நடக்கும் விசாரணையின் போது, மல்லையாவை நாடுகடத்துவது தொடர்பான முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x