Published : 24 Apr 2018 09:40 AM
Last Updated : 24 Apr 2018 09:40 AM

உலக மசாலா: வலி நிவாரணியால் ஏற்பட்ட விபரீதம்

ங்கிலாந்தைச் சேர்ந்த 23 வயது ஸ்கார்ட் பர்டி சமீபத்தில் வலி நிவாரணி மாத்திரைகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டார். அதன் விளைவாகத் தற்போது பெண் மேல் உள்ள ஆர்வம் ஆண் மீது திரும்பிவிட்டதாகக் குற்றம் சுமத்துகிறார். “6 மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் பாதம் பாதிக்கப்பட்டது. அந்த வலியைக் குறைக்க, மருத்துவர்கள் வலி நிவாரணி மாத்திரை யைப் பரிந்துரைத்தனர். வலி தொடர்ச்சியாக இருந்ததால் வலி நிவாரணியைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். என் காதலியின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது இருந்த காதல் குறைந்துகொண்டே வந்தது. அவரிடம் பேச வேண்டும், பழக வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய்விட்டது. இதனால் என் காதலிக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டோம். என்னுடைய இந்த மாற்றம் குறித்து ஒன்றும் புரியாமல் மிகவும் குழப்பம் அடைந்தார். எனக்கு காதலி மீதுதான் ஆர்வம் குறைந்ததே தவிர, பிற ஆண்களைப் பார்க்கும்போது காதல் ஊற்றெடுத்தது. 6 மாதங்களுக்குப் பிறகு காதலி, உறவை முறித்துக்கொண்டு சென்றுவிட்டார். அது குறித்து எனக்கு வருத்தமோ வலியோ இல்லாததை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. யோசித்துப் பார்த்தேன். இந்த வலி நிவாரணியைத் தவிர, வேறு எதையும் புதிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாத்திரைக்கும் என்னுடைய விருப்ப மாற்றத்துக்கும் தொடர்பு உண்டா என்று ஆராய்ச்சி செய்தேன். இறுதியில் நான் ஓரினச் சேர்க்கையாளராக மாறியதற்குக் காரணம் இந்த மாத்திரைதான் என்ற முடிவுக்கு வந்தேன். என் காதலியை நேரில் சந்தித்து, இனி எப்போதும் உன்னை ஏற்றுக்கொள்ளவே இயலாது என்றும் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் சொல்லிவிட்டேன். முதலில் நம்ப மறுத்தவர், பிறகு நான் நேர்மையாக ஒப்புக்கொண்டேன் என்று பாராட்டினார். இந்த வலி நிவாரணி மீது நான் குற்றம் சுமத்தினாலும் இப்படி என் விருப்பம் மாற்றம் அடைந்ததில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்” என்கிறார் ஸ்கார்ட் பர்டி. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மருந்து நிறுவனம் மறுத்திருக்கிறது.

வலி நிவாரணியால் ஏற்பட்ட விபரீதம்!

சீ

னாவில் வாகனங்கள் நிறுத்தும் இடம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பார்க்கிங் டிக்கெட் வாங்காமல் வாகனங்களை நிறுத்தினால், அது கிரிமினல் குற்றம். பரபரப்பான நேரத்தில் போக்குவரத்து அதிகாரிகள் டிக்கெட்டில் இருக்கும் தேதியை மட்டும் சரிபார்த்துவிட்டு அனுப்பிவிடுவார்கள். சமீபத்தில் ஒரு பெண் தன்னுடைய காரில் பார்க்கிங் டிக்கெட்டை ஒட்டிவிட்டு, சென்றுவிட்டார். இதைப் பார்த்த போக்குவரத்து அதிகாரி காருக்கு அருகே வந்து பார்வையிட்டார். அதில் பார்க்கிங் டிக்கெட் இருந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். தேதி உட்பட மற்ற தகவல்கள் எல்லாம் சரியாக இருந்தன. ஆனால் அரசாங்க முத்திரை மட்டும் இல்லை. இது போலி டிக்கெட் என்பதைக் கண்டுகொண்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டார். அந்தப் பெண் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்காமல், காரைவிட்டு இறங்கியவுடன் சுற்றும் முற்றும் பார்த்து, பையில் இருந்த பார்க்கிங் டிக்கெட்டை ஒட்டுவதைக் கண்டார். வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

ஏமாற்றுபவர்கள் ஒருநாள் மாட்டிக்கொள்வார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x