Published : 20 Apr 2018 03:58 PM
Last Updated : 20 Apr 2018 03:58 PM

ட்ரம்பின் பொய்களைக் கேட்டால் வெறுப்பாக இருக்கிறது: முன்னாள் எஃப்.பி.ஐ. இயக்குநர் காட்டம்

 ட்ரம்பின் நடவடிக்கையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று முன்னாள் எஃப்பிஐ  இயக்குனர் ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அமெரிக்காவின் முன்னாள் எஃபிஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி பேசும்போது, "அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை அவரை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது. டிரம்ப்பின் நடவடிக்கைகள் நாட்டின் சட்டம் மற்றும் நேர்மை போன்றவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

மேலும் தனிப்பட்ட முறையில் ட்ரம்ப் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் அவரது நடவடிக்கைகள் மீது வெறுப்பாக உள்ளது குறிப்பாக நாட்டின் சட்டத்தை மீறிய அவரது நடவடிக்கை மீதும், அவரது பொய்கள் மீதும்” என்று கூறினார்.

முன்னதாக, ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இ-மெயில்களை ஹிலாரி நீக்கினார் என டிரம்ப் தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்து வந்தார்.

அமெரிக்க எஃப்பிஐ அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கடித்தத்தில் ஜேம்ஸ் கோமி, "ஹிலாரி குற்றம் புரிந்தார் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. எஃப்பிஐ-யின் இந்த முடிவில் மாற்றம் இல்லை" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கோமி, எஃப்பிஐ பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x