Published : 17 Apr 2018 08:51 AM
Last Updated : 17 Apr 2018 08:51 AM

உலக மசாலா: தங்கத்தில் செருப்பு

பா

கிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் சல்மான் சாஹித், திருமண வரவேற்பில் அணிந்திருந்த ஆடை பரபரப்பாகியிருக்கிறது. தங்க இழைகளால் நெய்யப்பட்ட சூட், அதுக்குப் பொருத்தமாகத் தங்கப் படிகங்களால் ஆன டை, தங்கத்தால் செய்யப்பட்ட காலணி போன்றவற்றை அணிந்திருந்தார். இதைப் பார்த்தவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார்கள். சூட், டை, காலணி எல்லாம் சேர்த்து 25 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் செலவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். “எனக்கு எப்போதும் தங்கக் காலணி அணிய வேண்டும் என்று விருப்பம். பொதுவாகத் தங்கத்தைக் கழுத்தில் ஆபரணமாக மக்கள் அணிகிறார்கள். செல்வம் உங்கள் கால் தூசிக்குச் சமமானது என்பதைச் சொல்வதற்காகவே நான் தங்கக் காலணிகளை அணிய விரும்புகிறேன்” என்கிறார் சல்மான் சாஹித்.

இதற்கு நாம் ஒன்றும் சொல்ல முடியாது!

ண்டனில் வசிக்கும் 27 வயது டாம் சர்ச், 100 மைல் தொலைவில் பிரிஸ்டோலில் இருக்கும் நண்பரைப் பார்க்க விரும்பினார். ஆனால் ரயில் கட்டணம் அதிகமாக இருந்தது. எனவே மாற்று வழி குறித்து யோசித்தவர் பழைய கார் ஒன்றை வாங்கி பயணம் மேற்கொள்வது ரயில் கட்டணத்தை விடக் குறைவானது என்று அறிந்தார். “கம்ட்ரீ பகுதியில் ஒரு பெண்ணிடம் 1997-ம் ஆண்டு வாங்கப்பட்ட கார் விற்பனைக்கு வந்துள்ளதைக் கண்டுபிடித்தேன். 20 ஆண்டுகளுக்கு மேலானாலும் கார் ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. குறைவாகச் செலவு செய்தால் போதும் என்று தோன்றியது. அதனால் காரை வாங்கினேன். பணம் செலவு செய்து காரை நல்ல நிலைக்குக் கொண்டு வந்தேன். 6 மாதங்களுக்கு உரிய சாலை வரியைச் செலுத்தினேன். இன்சூரன்ஸ் எடுத்தேன். பெட்ரோல் போட்டேன். மொத்தம் 19 ஆயிரம் ரூபாய் செலவானது. ரயில் கட்டணத்தை விட ஆயிரம் ரூபாய் குறைவாகச் செலவு ஆகியிருக்கிறது! அத்தோடு ஒரு காரும் எனக்குச் சொந்தமாகியிருக்கிறது. ரயில் கட்டணத்தை விட, கார் பயணம் செலவு குறைவு என்று சொல்லவில்லை. பயணம் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டால் செலவை குறைக்கலாம்” என்கிறார் டாம் சர்ச்.

நமக்கு ரயில் கட்டணம்தான் குறைவானது!

ப்பானைச் சேர்ந்த 31 வயது டைகோ, வீடியோ கேம் விளையாடுவதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் கொண்டவர். இரவு முழுவதும் விளையாடுவார். குளிக்கும்போது, சாப்பிடும்போதும் விளையாடுவார். பயணத்திலும் விளையாடுவார். ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டுகளில் அவருக்கு சுவாரசியம் குறைவாகத் தோன்றிவிட்டது. சில கதாபாத்திரங்களின் குணா அம்சத்தை மாற்றுவதற்கும் விளையாட்டின் வேகத்தை அதிகரிப்பதற்கும் சொந்தமாக அப்ளிகேஷனை வாங்க முடிவு செய்தார். இதற்காகச் சுமார் 45 லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிவிட்டார். “நான் பெற்றோருடன் வசித்து வருகிறேன். என் சம்பாத்தியம் முழுவதும் எனக்குதான். அதனால் என்னால் இதைச் செய்ய முடிந்தது” என்கிறார் டைகோ.

விளையாட்டை விளையாட்டாகப் பார்ப்பதில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x