Published : 10 Apr 2018 08:34 AM
Last Updated : 10 Apr 2018 08:34 AM

உலக மசாலா: 500 வண்ணத்துப்பூச்சிகளை கொன்று ஓவியம்

சீ

னாவைச் சேர்ந்த லி ஸெங், க்வான்ஸொவ் பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு ஓவியக்கலை பயின்று வருகிறார். சமீபத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளை வைத்து இவர் உருவாக்கிய ஓவியம் அதிக வரவேற்பையும் அதிக எதிர்ப்பையும் பெற்று வருகிறது. “இந்த ஆண்டு நான் ஸ்பெஷல் பிராஜக்டைச் சமர்ப்பிக்க வேண்டும். என் நண்பர்கள் இதுவரை யாரும் பயன்படுத்தாத பொருளை வைத்து ஓவியத்தை உருவாக்கச் சொன்னார்கள். யாருமே பயன்படுத்தாத பொருளைப் பல நாட்கள் யோசித்தேன். ஆராய்ச்சியும் மேற்கொண்டேன். இறுதியில் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகளை வைத்து ஓவியத்தை உருவாக்க தீர்மானித்தேன். புகழ்பெற்ற ஓவியர் வான்காவை உருவாக்குவதற்கு எனக்கு சுமார் 500 வண்ணத்துப்பூச்சிகள் தேவைப்பட்டன. அதற்காக வேட்டையில் இறங்கினேன். ஆரம்பத்தில் வண்ணத்துப்பூச்சிகளைக் கொல்கிறோமே என்று வருத்தமாக இருந்தது. சில நாட்களில் இறந்துபோகும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மறு வாழ்வு அளிக்கிறோம் என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்து, பதப்படுத்தி, ஓவியத்தில் கொண்டுவருவது நான் நினைத்ததைப்போல் அவ்வளவு எளிதாக இல்லை. என்னுடைய இந்த பிராஜக்ட் எல்லோரையும் கவர்ந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பேராசிரியர்கள் உட்பட பலரும் என்னைக் கண்டித்துவிட்டனர். இந்த ஓவியம் உருவாக்கியதில் இப்போதுவரை எனக்குக் குற்றவுணர்வு ஏற்படவில்லை. இந்த ஓவியத்தின் அழகையும் உழைப்பையும் மதிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பாராட்டு எனக்கு ஆறுதலைத் தருகிறது” என்கிறார் லி ஸெங்.

வான்கா மன்னிக்க மாட்டார்!

லகில் உள்ள பாதுகாப்பான நகரங்களில் டோக்கியோவும் ஒன்று. ஆனால் இங்கே தனித்து வாழும் பெண்களைக் குறிவைத்து சிலர் தாக்கி வருகிறார்கள். இதுபோன்ற பெண்களுக்காகவே ‘திரைச்சீலையில் மனிதன்’ என்ற தலைப்பில் புதிய அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறது லியோ பேலஸ் என்ற நிறுவனம். திரைச்சீலைகளை வாங்கி, ஸ்மார்ட்போனில் அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இரவு நேரத்தில் போனை இயக்கினால் திரைச்சீலையில் ஆணின் உருவம் தெரியும். காபி குடிப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, உடற்பயிற்சி செய்வது, கிடார் வாசிப்பது, புத்தகம் படிப்பது, மார்ஷியல் கலை பயில்வது, விளையாடுவது, நடனமாடுவது என்று மொத்தம் 12 வித நடவடிக்கைகள் திரையில் வரும். ஒருமுறை இயக்கினால் சுமார் 5 மணி நேரத்துக்கு இந்த உருவங்கள் வந்துகொண்டே இருக்கும். இதைப் பார்க்கும் குற்றவாளிகள், பெண் தனியாக இல்லை என்றும் வலிமையான ஆண் உடன் இருக்கிறான் என்றும் அறிந்துகொண்டு கிளம்பிவிடுவார்கள். தனித்து வாழும் இளம் பெண்கள் மத்தியில் இந்தத் திரைச்சீலைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதை ஜப்பானில் மட்டுமே கொண்டு செல்லும் திட்டம் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது லியோ பேலஸ்.

பெண்கள் தனித்து வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குவதுதான் ஆரோக்கியமானது, நிரந்தரமானது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x