Last Updated : 04 Apr, 2018 12:45 PM

 

Published : 04 Apr 2018 12:45 PM
Last Updated : 04 Apr 2018 12:45 PM

“ரஷ்யாவிடம் என்னைவிட கடுமையாக நடந்து கொண்டவர்கள் யாரும் இல்லை’’ - ட்ரம்ப்

ரஷ்யாவிடம் என்னைவிட கடுமையாக நடந்து கொண்டவர்கள் யாரும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை தலைவர்களுடனான சந்திப்பில் ட்ரம்ப் கூறும்போது, “என்னை காட்டிலும் ரஷ்யாவிடம் கடுமையான நடந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. மேலும் இதற்கிடையில் ரஷ்ய அதிபர் புதினுடன் நல்ல முறையில் உறவில் இருப்பது ஆரோக்கியமான விஷயம். ரஷ்யாவுடன் நல்ல உறவு முறையில் இருப்பது முக்கியமான கடமையும் கூட.

ரஷ்யாவுடனும், சீனாவுடனும் சேர்ந்து இருப்பது நல்ல விஷயம்தான். எதிர்மறையானது கிடையாது.

நாம் இப்போது மிகுந்த சக்தி வாய்ந்த நாடாக இருக்கிறோம். நாம் நமது ஆற்றல் ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறோம். இது ரஷ்யாவுக்கு சாதகமானதல்ல. ஆனால் அது நிச்சயமாக அமெரிக்காவுக்கு சாதகமான விஷயம்.

நமது ராணுவம் முன்பு இருந்தத்தைவிட பலமானதாக மாறப் போகிறது. இதுவும் ரஷ்யாவுக்கு உகந்த செய்தி அல்ல” என்று கூறினார்.

முன்னதாக அமெரிக்கா - ரஷ்யா தொடர்பான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்துக்கு ரஷ்ய அதிபர் புதினை ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x