Published : 21 Mar 2018 08:39 AM
Last Updated : 21 Mar 2018 08:39 AM

பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசிக்கு போலீஸ் காவல்

பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007 முதல் 2012 வரை பதவி வகித்தவர் நிக்கோலஸ் சர்கோசி. 2007-ல் நடந்த அதிபர் தேர்தலின்போது இவருக்கு லிபியா நாட்டிலிருந்து முறைகேடாக நிதி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லிபியா வின் முன்னாள் அதிபர் மம்மர் கடாபி உள்ளிட்டோர் இந்த நிதியை சர்கோசிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் கோரமானவை என்றும் சர்கோசி கூறியுள்ளார்.

இந்நிலையில் போலீஸார் அவரை முதல்முறையாக காவலில் வைத்துள்ளனர். இதுதொடர் பான விசாரணை 2013-ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. ஆனால் விசாரணை ஆணையம் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தியது. ஆனால் கடாபி மூலம், சர்கோசிக்கு 5 கோடி யூரோக்கள் வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2011-ல் கடாபியின் மகன் அளித்த பேட்டி மூலம் சர்கோசி பணம் பெற்றது தெரிய வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x