Last Updated : 13 Mar, 2018 10:21 AM

 

Published : 13 Mar 2018 10:21 AM
Last Updated : 13 Mar 2018 10:21 AM

130,000 டாலர்களைத் திருப்பி தருகிறேன்; அதிபர் ட்ரம்புடனான உறவை அம்பலப்படுத்தியே தீருவேன்: நடிகை திட்டவட்டம்

போர்னோ வகைத் திரைப்படங்களில் நடிக்கும் ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற நடிகை தான் அதிபர் ட்ரம்புடன் உறவு வைத்துக் கொண்டதை வெளியே சொல்லக் கூடாது என்று கொடுத்த 130,000 டாலர்களைத் திருப்பித் தர தயார் என்றும் ட்ரம்ப்பை அம்பலப்படுத்தியே தீருவேன் என்றும் கூறியுள்ளார்.

ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற இந்த நடிகையின் உண்மையான் பெயர் ஸ்டெபானி கிளிஃபர்ட், இவருடன் 2016-ல் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதாவது ட்ரம்ப் பற்றி எதுவும் வெளியில் சொல்லக் கூடாது என்று இவருக்கு 1,30,000 அமெரிக்க டாலர்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பணத்தைத் திருப்பி அளிக்க அவர் முன் வந்துள்ளதால் அவர் ‘பேசக்கூடாது’ என்ற நிபந்தனை ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப் வழக்கறிஞர் மைக்கேல் கோஹெனுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் மூலம் தெரியவந்துள்ளது.

“அட்டர்னி கோஹன், அதிபர் ட்ரம்ப் ஆகியோர் கிளிபோர்டின் இந்த திட்டத்துக்கு செவி சாய்க்க வேண்டும்” என்று நடிகையின் வழக்கறிஞர் மைக்கேல் அவினாட்டி தெரிவித்துள்ளார், மேலும் இதன் மூலம் கிளிப்போர்ட் தன் பக்க நியாயத்தை தெரிவிக்க முடியும் என்பதோடு யார் உண்மையைக் கூறுகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் முடிவு செய்யட்டும் என்றார்.

2016 அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே ‘மவுன ஒப்பந்தம்’ போடபப்ட்டது. இதில் நடிஐ மட்டுமே கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப் கையெழுத்திடவில்லை இதனால் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று வழக்கு ஒன்றில் நடிகை கோரியுள்ளார்.

வழக்கம் போல் வெள்ளைமாளிகை நடிகையின் கோரல்களை கடுமையாக மறுத்துள்ளதோடு ட்ரம்ப் நிறுவனமோ ட்ரம்ப் தொடர்புடையவர்களோ அவருக்கு 130,000 டாலர்களைக் கொடுக்கவில்லை, என்று தெரிவிக்க நடிகையோ அத்தனை பேச்சுவார்த்தைகளும் ட்ரம்புக்குத் தெரியும் என்று தன் வழக்கில் கூறியுள்ளார்.

மேலும் நடிகை வாயைத் திறக்காமல் இருக்க பணம் அளித்தது தேர்தல் பிரச்சார நிதி விதிமுறைகளை மீறியுள்ளது என்று தேர்தல் ஆணையம் மற்றும் நீதித்துறைக்கும் ட்ரம்ப் மீது புகார் சென்றுள்ளது.

வாயை அடைக்க பணம் கொடுப்பது அங்கு வர்த்தக வட்டாரங்களில் சகஜம் என்றாலும் தேர்தலில் அது செல்வாக்கு செலுத்தியது என்றால் அதன் உண்மைகள் வெளியில் வர வேண்டும் என்று காமன்காஸ் குழுவின் துணைத் தலைவர் பால் எஸ்.ரயான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x