Published : 11 Mar 2018 11:18 AM
Last Updated : 11 Mar 2018 11:18 AM

உலக மசாலா: இடுப்பு மனிதர் யு யா

பெ

ரிய வளையத்தை இடுப் பில் வைத்துச் சுற்றுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஜப்பானைச் சேர்ந்த யுயா யமுடா, ராட்சத வளையத்தை இடுப்பால் சுற்றி கின்னஸ் சாதனை செய்துவிட்டார்! ‘இடுப்பு மனிதர் யு யா’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், வளையங்கள் மூலம் வித்தைகள் காட்டுவதில் வல்லவர். ஒரே நேரத்தில் தலை, கழுத்து, இடுப்பு போன்ற பகுதிகளில் ஏராளமான வளையங்களை வைத்து, சுற்றக் கூடியவர். சமீபத்தில் 16 அடி 10 அங்குல அகலமுள்ள வளையத்தை இடுப்பில் வைத்துச் சுற்றி சாதனை படைத்தார். இந்த வளையம் மூன்று பேர் தூக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தது. அதை ஒரே ஆளாகச் சுற்றிக் காட்டியிருக்கிறார். இதுவரை இதுபோன்ற ஒரு சாதனை உலகத்தில் நடத்தப்பட்டதில்லை. ஏற்கெனவே 4.93 மீட்டர் அகலமுள்ள வளையத்தைச் சுற்றி உலக சாதனை படைத்தார். அஷ்ரிடா ஃபர்மன் என்பவர் அந்தச் சாதனையை முறியடித்தார். தற்போது மீண்டும் சாதனையைத் தன்வசப்படுத்திக்கொண்டார் இவர். “நான் ஏற்கெனவே செய்த சாதனைகள் முறியடிக்கப்பட்டுவிட்டதால், புதிய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று பல மாதங்களாக முயற்சி செய்துகொண்டிருந்தேன். அந்த முயற்சிக்குப் பலன் கிடைத்துவிட்டது” என்கிறார் யுயா யமுடா.

வாழ்த்துகள் யுயா யமுடா!

மெரிக்காவின் கொலராடோ பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம், பல்பொருள் அங்காடியிலிருந்து ஓட்ஸ் பாக்கெட்டை வாங்கிவந்தது. பெரிய அங்காடி என்பதால் காலாவதியாகும் தேதியைப் பார்க்காமல் வாங்கிவிட்டனர். வீட்டுக்கு வந்தவுடன் ஜோசியா ஓட்ஸைச் சாப்பிட ஆரம்பித்தார். வழக்கமான ஓட்ஸ்போல் அவ்வளவு சுவையாக இல்லை. ஆனாலும் மோசமில்லை என்பதால் முழுவதையும் சாப்பிட்டு முடித்துவிட்டார். சற்று நேரம் கழித்து அந்தியா கார்ல்ஸ் சாப்பிட ஆரம்பித்தார். இரண்டு ஸ்பூன் சாப்பிட்டதும் சுவை சரியில்லை என்பதை அறிந்துகொண்டார். ஓட்ஸ் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தபோது, அது வித்தியாசமாக இருந்ததைக் கண்டார். காலாவதி தேதியைப் பார்த்தவருக்கு மயக்கமே வந்துவிட்டது. 1997-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. “21 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியான உணவைச் சாப்பிட்டிருக்கிறோம் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்தது. என் கணவரின் உடல்நிலை என்னாகுமோ என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை. நன்றாகக் கவனித்திருந்தால் காலாவதி தேதி பார்க்காமல் கூட இது பழைய பாக்கெட் என்று கண்டுபிடித்திருக்கமுடியும். இப்போது இதுபோன்ற பாக்கெட்கள் வருவதில்லை. என் கணவருக்கு 21 வயதானபோது இந்த ஓட்ஸ் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் 42-வது வயதில் சாப்பிட்டிருக்கிறார். இது எப்படி இவ்வளவு ஆண்டுகள் அந்த அங்காடியில் இருந்திருக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. அதனால் இந்த விஷயத்தை மீடியாக்களிடம் தெரியப்படுத்தினோம். இனியாவது எங்களைப்போல் இல்லாமல் உணவு, மருந்து விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்கிறார் அந்தியா.

அமெரிக்கர்களிடமும் விழிப்புணர்வு இல்லையா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x