Published : 27 Feb 2018 08:08 AM
Last Updated : 27 Feb 2018 08:08 AM

உலக மசாலா: நாயாக மாறிய ஆடு!

ம்ப்ரியா நாட்டைச் சேர்ந்த அலி வாக்ஹன், ஆதரவின்றி கிடந்த ஓர் ஆட்டுக்குட்டியை வீட்டுக்கு கொண்டு வந்தார். மெர்லி என்று பெயரிட்டு தன் நாய் ஜெஸ்ஸுடன் சேர்த்து வளர்த்து வந்தார். நாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி, தன்னையும் நாயாக நினைத்துக்கொண்டது. ஆட்டுக்கு வைத்த புல், இலைதழைகளைச் சாப்பிடுவதில்லை. நாய்க்கு வைக்கும் பாத்திரத்தில் உள்ள உணவைத்தான் சாப்பிடுகிறது. வீட்டுக்கு வெளியே தங்குவதில்லை. நாய் வசிக்கும் மெத்தையில்தான் உறங்குகிறது. நாயைப் போலவே கழுத்தில் கயிற்றைக் கட்டி வெளியே அழைத்துச் செல்வதை விரும்புகிறது. மொத்தத்தில் உணவு, பழக்க வழக்கம் அனைத்திலும் நாயாகவே நடந்துகொள்கிறது. “இந்த ஆட்டுக்குட்டி நாயை பின்பற்றும் என்று நினைக்கவே இல்லை. நாயும் இதைப் போட்டியாக நினைக்காமல் விட்டுக் கொடுத்து விடுகிறது. இரண்டும் ஒன்றாகவே திரிகின்றன. உடல் முழுவதும் கம்பளி இருந்தாலும் நாயைப் போல படுக்கையில்தான் உறங்குகிறது. ஆட்டின் பழக்கத்தை மாற்ற நினைத்துப் பல முயற்சிகளை மேற்கொண்டேன். எல்லாமே தோல்வியில் முடிந்தன. அதனால் இப்போது ஒரு ஆட்டை வாங்கியிருக்கிறேன். இந்த ஆட்டுடன் மெர்லியையும் சேர்ந்து வெளியே அனுப்புகிறேன். மெர்லி சுற்றிவிட்டு, வீட்டுக்கு வந்து நாயின் உணவைத்தான் சாப்பிடுகிறது. காலப்போக்கில் இந்தப் பழக்கம் மாறும் என்று காத்திருக்கிறேன்” என்கிறார் அலி வாக்ஹன்.

ஆடு, நாயாக முடியுமா?

நி

யூசிலாந்தைச் சேர்ந்த கேம்ப்பெல் தீவில் இருக்கிறது உலகிலேயே தனிமையான மரம். இங்கிருந்து 200 கி.மீ. தூரத்தில் உள்ள ஆக்லாந்து தீவில்தான் இன்னொரு மரத்தைப் பார்க்க முடியும். உலகிலேயே மிகவும் கடினமான பகுதி கேம்ப்பெல் தீவுதான். எப்போதும் இங்கே வலுவான காற்று வீசிக்கொண்டே இருக்கும். ஆண்டுக்கு 600 மணி நேரம்தான் சூரிய ஒளி இருக்கும். ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே மழை இருக்காது. இது வாழத் தகுதி இல்லாத இடம். ஆராய்ச்சியாளர்கள் அரிதாக இங்கே வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் இந்தத் தீவு பாலைவனமாக மாறி வருகிறது. இங்கே மரங்கள் வளர்வதற்கான சூழல் இல்லை. புற்கள் மட்டுமே காணப்படுகின்றன. இந்தத் தீவில் இருக்கும் ஒரே மரம் சிட்கா ஸ்ப்ரூஸ்தான். நியூசிலாந்து கவர்னர் ஒருவர் 1901-1907-ம் ஆண்டுக்குள் இங்கே மரங்களை நட்டு, தீவைச் சோலையாக மாற்ற எண்ணியிருக்கிறார். அப்போது நட்ட மரங்களில் இந்த மரமே புயல், மழை எல்லாவற்றையும் தாக்குப் பிடித்து, நூறு ஆண்டுகளையும் கடந்திருக்கிறது! இது உயரமான மரமாக இல்லை. ஒரு காலிப்ளவர் வடிவில் இருக்கிறது. இப்படித் தன்னை மாற்றிக்கொண்டதால்தான் தப்பியிருக்கிறது. 1958-ம் ஆண்டு இங்கே வானிலை ஆய்வுக் கூடம் ஒன்று நிறுவப்பட்டது. தானியங்கி நிலையம் என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மட்டும் ஆட்கள் வருவார்கள். கடந்த 50 ஆண்டுகளாக இந்த மரத்தை யாரும் வெட்டவில்லை. உலகிலேயே தனியாக இருக்கும் மரம் என்று அறிவித்துவிட்டனர்.

தனிமையில் வாழும் மரம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x