Published : 24 Feb 2018 07:46 AM
Last Updated : 24 Feb 2018 07:46 AM

பாலியல் தொந்தரவு புகார்: ஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் ராஜினாமா

பாலியல் தொந்தரவு புகாரை தொடர்ந்து ஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், “தேசிய கட்சியின் தலைவர் மற்றும் ஆஸ்திரேலிய துணை பிரதமர் பதவியிலிருந்து வரும் திங்கள்கிழமை விலகவுள்ளேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக நியூ இங்கிலாந்து மக்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன் பர்னபி ஜாய்ஸ்க்கு எதிராக பாலியல் தொல்லை புகார் கொடுத்ததை தொடர்ந்து, ஆளும் தேசிய கட்சி் எம்.பி.க்கள் சிலர் பர்னபிக்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர். இதையடுத்து பர்னபி இந்த முடிவை எடுத்துள்ளார்.

பர்னபிக்கு எதிரான பாலியல் தொல்லை புகாருக்கு முன்னதாக, பர்னபி தனது முன்னாள் ஊடக ஆலோசகர் விக்கி கேம்பியனுடன் உறவு வைத்திருந்ததன் மூலம் ஒரு குழந்தைக்கு தந்தை ஆகப்போவதாக செய்தி வெளி யானது.

பர்னபியின் செயல்பாடுகளை பிரதமர் மால்கம் கடந்த 15-ம் தேதி வெளிப்படையாக விமர்சித்தார். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x