Published : 22 Feb 2018 08:32 AM
Last Updated : 22 Feb 2018 08:32 AM

உலக மசாலா: எங்கிருந்தோ கேட்கும் மர்மக் குரல்..

னடாவில் உள்ள வின்ட்சர் நகர் குடியிருப்புப் பகுதியில் தினமும் அமானுஷ்யமான சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருக்கும் இந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது, ஏன் வருகிறது, அதை எப்படித் தடுப்பது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. சில நேரம் மணிக்கணக்கில் நீடிக்கும், சில நேரம் நாட்கணக்கில் நீடிக்கும். தொடர்ந்து இந்த சத்தத்தைக் கேட்பவர்களுக்கு தலைவலி, தூக்கமின்மை, எரிச்சல், மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிலர் இந்த சத்தத்துக்குப் பயந்து வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர்.

“ஆரம்பத்தில் பேய், பிசாசோ என்று பயந்தோம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. வீட்டுக்குள், காருக்குள் இருந்தால் இந்தச் சத்தத்திலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம். தோட்டத்துக்கு தண்ணீர் விடலாம் என்றாலோ, சூரிய வெளிச்சத்தில் சிறிது நேரம் இருக்கலாம் என்றாலோ முடியாது. இதுவரை 2,10,000 பேர் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் சத்தம் குறித்து ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. சத்தம் எப்போது வரும், எப்போது நிற்கும் என்று சொல்ல முடியாது. வேறு இடங்களுக்கு செல்ல முடிந்தவர்கள் தப்பிவிட்டனர். நாங்கள்தான் இந்த சத்தத்துடனே காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கிறோம். விலங்குகளின் நிலை இன்னும் மோசம். அவை மிகுந்த மன அழுத்தத்துக்கு சென்றுவிடுகின்றன. நாய்கள் எப்போதும் அழுதுகொண்டிருக்கின்றன. பூனைகள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை” என்கிறார் 64 வயது மைக் ப்ரோவோஸ்ட். பொறியாளர் டிம் கார்பென்டர், “இது ஏதோ இயந்திரங்களை வைத்து நிலத்தைத் தோண்டுவதுபோல் தெரிகிறது. பக்கத்து தீவுகளில் உள்ள அமெரிக்க இரும்பு தொழிற்சாலைகளில் பெரிய இயந்திரங்களை வைத்து வேலை செய்கிறார்கள். அதில் ஏற்படும் சத்தமா என்று தெரியவில்லை” என்கிறார். கனடா அரசாங்கமும் ஆராய்ச்சியாளர்களும் பிரச்சினையை தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். ஆனால் அமெரிக்க தொழிற்சாலை இந்தப் பிரச்சினை குறித்து பேசுவதற்கு இதுவரை ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இந்த காலத்திலும் கண்டுபிடிக்க முடியாத சத்தமா?

ஷ்யாவைச் சேர்ந்த 15 வயது மரியா ஸ்வெடோஸாரோவாவும் 12 வயது அனஸ்டாசியா வினோக்ராடோவாவும் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டனர். சகோதரிகள் இருவரும் வீடியோவில் தங்களின் இறுதி நிமிடங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். டிமிட்ரி என்ற இளைஞரை மரியா காதலித்திருக்கிறார். சிற்றன்னை இதைக் கண்டித்திருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் மரியா என்கிறார்கள் அவரது தோழிகள். “என்னை மன்னித்துவிடு. நான் உன்னை அதிகம் விரும்புகிறேன், என்னை விட நல்ல இணை உனக்குக் கிடைக்கும்” என்று டிமிட்ரிக்கு வீடியோவில் தகவல் சொல்லியிருக்கிறார் மரியா. அனஸ்டாசியா, “போய் வருகிறேன். எல்லோரையும் உண்மையாக விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, 10 மாடி கட்டிடத்திலிருந்து ஒன்றாக குதித்து, இறந்து போயிருக்கிறார்கள். இது ப்ளூவேல் சவாலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அடக் கொடுமையே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x