Published : 07 Feb 2018 08:23 AM
Last Updated : 07 Feb 2018 08:23 AM

உலக மசாலா: பூனைகளின் நிலம்

மே

ற்கு சைபிரீயாவில் உள்ள பனி சூழ்ந்த ப்ரைகோரோட்னி கிராமம், மற்ற கிராமங்களைவிட வித்தியாசமானது. இங்கே ஆயிரக்கணக்கான சைபீரிய பூனைகள் வசிப்பதால், ‘கோஷ்லாண்டியா’ அதாவது பூனைகளின் நிலம் என்று அழைக்கிறார்கள். 14 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற கிராமங்களைப்போல்தான் இதுவும் இருந்தது. 2003-ம் ஆண்டு 59 வயது அல்லாவும் அவரது கணவர் செர்கேயும் ஓர் அழகான சைபீரிய பூனையை கிராமத்துக்குக் கொண்டு வந்தனர். பபுஷ்கா என்ற இந்தப் பூனை, ஒரு வருடம் கழித்து 5 குட்டிகளை ஈன்றது. சில ஆண்டுகளில் பூனைகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் பெருகிவிட்டது. அல்லாவின் பண்ணை, வீடு, தெரு என்று எங்கு பார்த்தாலும் பூனைகளாகத் திரிந்தன. எவ்வளவு பூனைகள் இருக்கின்றன என்று யாராவது கேட்டால், ‘பத்து லட்சம் பூனைகளுக்கு மேல் இருக்கலாம்’ என்று பதில் சொல்வார் அல்லா. சைபீரிய பூனைகள் உருவத்தில் பெரியவை. ஒவ்வொரு பூனையும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருக்கும். “பூனைகளைப் போல் அழகான உயிரினம் வேறு இல்லை! நாங்கள் தினமும் பூனைகளைப் படங்கள் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவோம். திடீரென்று எங்கள் சைபீரிய பூனைகளை, ‘நார்வே பூனைகள்’ என்று சமூக வலைதளங்களில் வெளியிட ஆரம்பித்தனர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது, எங்களின் அனுமதியின்றி, ஒரு நார்வே இணையதளம் ‘நார்வே பூனைகள்’ என்ற பெயரில் தொடர்ச்சியாக எங்களின் படங்களை வெளியிட ஆரம்பித்தது. இந்தத் தவறான தகவலை உலகம் முழுவதும் நம்ப ஆரம்பித்துவிட்டனர். கோஷ்லாண்டியா பூனைகளில் 2 வகைகள் இருக்கின்றன. காடுகளுக்குள் சென்று வேட்டையாடக்கூடியவை ஒரு வகை. இவை காடுகளுக்குள் சென்றால், திரும்பி வர பல மாதங்களாகும். மற்றொரு வகை வீட்டுப் பூனைகளைப் போலிருப்பவை. மனிதர்கள் கொடுக்கும் உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு, எலிகளை வேட்டையாடிக்கொண்டு இருப்பவை. இந்த இரண்டு வகை பூனைகளிலும் பெண் பூனைகள் கிராமத்தை விட்டு வெளியேறுவதில்லை” என்கிறார் அல்லா.

எவ்வளவு அழகாக இருக்கின்றன இந்த பூனைகள்!

1980

-ம் ஆண்டு ஜார்ஜியாவில் உள்ள காட்டில் ஓக் மரங்களை வெட்டும்போது, பதப்படுத்தப்பட்ட (மம்மி) நிலையில் ஒரு நாயைக் கண்டறிந்தனர். மரத்தின் மேல் பகுதியில் இருந்த பொந்துக்குள் இந்த நாய் இருந்தது. மரத்தை மெதுவாக வெட்டி, காட்டில் உள்ள மர அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டனர். 60 ஆண்டுகளாக இந்த வேட்டை நாய், மரப் பொந்துக்குள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஓக் மரத்திலுள்ள அமிலம், நாயின் உடலைக் கெட்டுவிடாமல் பாதுகாத்திருக்கிறது. ‘ஸ்டக்கி’ என்று பெயரிடப்பட்ட இந்த நாய்தான் இப்போது அருங்காட்சியகத்தில் எல்லோரையும் கவர்ந்து கொண்டிருக்கிறது. “மரத்திலிருந்து இந்த நாய் வெளியே எடுக்கப்பட்டபோது, நாங்கள் இந்த நாயின் சிறப்பை அறிந்திருக்கவில்லை. ஆராய்ச்சியாளர்கள் சொன்ன பிறகுதான், இயற்கையாக பதப்படுத்தப்பட்ட நாய் என்பதையும் 60 ஆண்டுகள் பாதிப்பின்றி இருந்ததையும் அறிந்துகொண்டோம்” என்கிறார் அருங்காட்சியகத்தின் மேலாளர் பிராண்டி ஸ்டீவன்சன்.

‘மம்மி’ நாய்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x