Published : 04 Feb 2018 09:37 AM
Last Updated : 04 Feb 2018 09:37 AM

உலக மசாலா: என்னதான் சொன்னாலும் திகிலாகத்தான் இருக்கு!

 

தா

ய்லாந்தைச் சேர்ந்த முகமது இவான், வீட்டிலேயே ஒரு முதலையை வளர்த்து வருகிறார். 200 கிலோ எடை கொண்ட 21 வயதான இந்த முதலையுடன் விளையாடுகிறார். பல் துலக்கி விடுகிறார். குளிக்க வைக்கிறார். “1997-ம் ஆண்டு ஒரு மீனவரின் வலையில் சின்னஞ்சிறு குட்டியாக மாட்டிக்கொண்டது. அதை பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. பணம் கொடுத்து வாங்கி வந்துவிட்டேன். ஆனால் என் வீட்டில் ஒருவரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்காக நான் முதலையைக் கைவிடவில்லை. கோஜெக் என்று பெயரிட்டு அன்பாக வளர்த்து வந்தேன். வராண்டாவில் ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டியை முதலைக்காகக் கட்டினேன். எனக்கு முதலைகளைப் பற்றி பெரிதாக விஷயம் ஒன்றும் தெரியாது. நாளடைவில் நேரிடையாகவே முதலையின் இயல்பை அறிந்துகொண்டேன். வீட்டிலுள்ளவர்களுக்கும் முதலையைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இப்போது 8 அடி நீள பிரம்மாண்டமான முதலையாக மாறிவிட்டது. என் குழந்தைகள் முதலையின் அருகிலேயே விளையாடுகின்றன. இதுவரை யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. தினமும் 1.5 கிலோ முதல் 5 கிலோ மீன் வரை சாப்பிடுகிறது. இதைத் தவிர பெரிய செலவு ஒன்றும் இல்லை. வாரம் ஒரு முறை முதலையின் தோலைத் தேய்த்து, நன்றாகக் குளிக்க வைப்பேன். பல் துலக்கிவிடுவேன். உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் கூட முதலையைப் பார்க்க வருகிறார்கள். வெளிநாட்டுக்காரர் ஒருவர் 47 லட்சம் ரூபாய்க்கு முதலையை வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். இது என் குழந்தை என்று மறுத்துவிட்டேன்” என்கிறார் முகமது.

என்னதான் சொன்னாலும் திகிலாகத்தான் இருக்கு!

ஃபே

ஷன் மாடலிங் துறையை எப்பொழுதுமே இளையவர்கள்தான் ஆதிக்கம் செலுத்திவருவார்கள். பெரும்பாலான மாடல்கள் 30 வயதில் ஓய்வு பெற்றுவிடுவார்கள். ஆனால் ரஷ்யாவைச் சேர்ந்த ஓல்டுஷ்கா மாடலிங் நிறுவனம், இந்த விதியை உடைத்திருக்கிறது. 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இந்த நிறுவனத்தின் மாடல்களாக இருக்கிறார்கள். ரோஸ்டர் என்ற மாடலுக்கு 85 வயது. இந்த நிறுவனத்தை நடத்தி வரும் இகோர் கவார், ஒளிப்படக்காரராக இருந்தவர். இயற்கை மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருப்பவர். தன்னுடைய நிறுவனத்தில் வயதான மாடல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். இதுவரை 45 வயதிலிருந்து 85 வயது வரை 18 மாடல்கள் இங்கே வேலை செய்து வருகிறார்கள். “முதலில் 60 வயது மாடல்தான் எங்கள் நிறுவனத்தில் இளையவராக இருந்தார். 45 வயது செர்கே அவர் வயதை விட, தோற்றத்தில் முதுமையை அடைந்திருந்ததால் அவரை வேலைக்கு எடுத்தேன். இப்போது அவர்தான் இளையவர். வயதாக ஆக அழகு கூடுவதாக நினைக்கிறேன். நான் சந்தித்த அழகான முதியவர்களின் முகங்களே என்னை இப்படி ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கத் தூண்டியது” என்கிறார் இகோர்

மாடலிங் உலகைக் கலக்கும் முதியவர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x