Published : 20 Jan 2018 09:59 AM
Last Updated : 20 Jan 2018 09:59 AM

உலக மசாலா: கோடீஸ்வர யாசகர்கள்!

து

பாய் பணக்கார நகரம். இங்கே யாசகம் கேட்பவர்கள் கூட மாதத்துக்கு சுமார் 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது. துபாயில் யாசகம் கேட்பது சட்டப்படி குற்றம். ஆனால் இவர்கள் சாதாரணமான யாசகர்கள் அல்லர். தொழில்முறை யாசகர்கள். வெளிநாடுகளில் இருந்து 3 மாத விசாவோடு துபாய்க்கு வருகிறார்கள். மிக நாகரீகமாக உடை அணிகிறார்கள். பார்ப்பதற்குப் பணக்காரர்கள் போலவே தோற்றம் அளிக்கிறார்கள். இவர்கள் கண்ணில் படுகிறவர்களிடமெல்லாம் யாசகம் கேட்பதில்லை. பணக்காரர்களிடம் மட்டுமே கேட்பார்கள். ‘நான் பணக்காரன். கையில் இருந்த பணமும் வங்கி அட்டைகளும் திருடப்பட்டுவிட்டன. என் உறவினர் மயங்கிக் கிடக்கிறார். என் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது..’ இப்படி ஏதாவது ஒரு கதையை நெஞ்சை உருக்கும் விதத்தில் சொல்வார்கள். 17 ஆயிரம் ரூபாயை உதவியாகக் கேட்பார்கள். துபாய் செல்வந்தர்களுக்கு இது ஒரு பெரிய தொகை இல்லை என்பதால், கொடுத்துவிடுகிறார்கள். மசூதி வாசலில் யாசகம் கேட்டால், கேள்வி கேட்காமல் கேட்ட தொகை கிடைத்துவிடுகிறது. அரை மணி நேரத்தில் 20 ஆயிரம் ரூபாயைச் சம்பாதித்துவிடுகிறார்கள். இப்படி ஒரு மாதத்தில் 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். மூன்று மாதங்களில் பணம் சேர்ந்தவுடன் துபாயிலிருந்து கிளம்பிவிடுகிறார்கள். பணம் செலவான பிறகு, மீண்டும் துபாய் நோக்கி வருகிறார்கள். தொழில்முறை யாசகர்களைக் கண்டுபிடிப்பது கடினம். அப்படியும் 65 யாசகர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். எப்படியோ அவர்கள் வெளியே வந்துவிடுகிறார்கள் என்கிறார்கள்.

கோடீஸ்வர யாசகர்கள்!

ஷ்யாவைச் சேர்ந்த 20 வயது அனஸ்டாசியா டிமிட்ரிவா இரவு நேர கேளிக்கை விடுதிக்குச் சென்றார். அங்கே சில ஆண்களால் காயப்படுத்தப்பட்டார். சில மணி நேரத்துக்குப் பிறகு சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனைக்குச் சென்றார். அந்த மருத்துவரைக் கண்டதும் அதிச்சியடைந்தார். விடுதியில் தாக்கியவர்களில் அந்த மருத்துவர் விளாடிமிர் நவ்மோவ்வும் ஒருவர். அனஸ்டாசியாவைக் கண்டதும் மீண்டும் மருத்துவர் தாக்க ஆரம்பித்தார். அப்போது ஒரு செவிலியர் அங்கே வந்ததால் மருத்துவர் அடிப்பதை நிறுத்தினார். அந்தக் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. அனஸ்டாசியா காவல் துறையில் புகார் கொடுத்தார். தான் அடித்ததை மறுத்த மருத்துவர் வீடியோவை பார்த்த பிறகு, “அந்தப் பெண்தான் முதலில் என்னைத் தாக்கினார். அதற்கு சாட்சிகள் இருக்கின்றன. மருத்துவமனையில் அவர் தாக்க ஆரம்பித்தவுடன் அந்தச் சம்பவம் கேமராவில் பதிவானால், அவர் சிறை செல்ல நேரிடும் என்று நினைத்தேன். உடனே நான் அடிப்பதுபோல் நடந்துகொண்டேன். என் நண்பர்கள்தான் அவரை டிஸ்கோவில் தாக்கினார்கள். நானும் இந்தப் பெண்ணுக்காக நண்பர்களுடன் சண்டையிட்டேன். கடைசியில் என்னையே குற்றவாளியாக்கிவிட்டார்” என்கிறார் விளாடிமிர். மருத்துவ நிர்வாகம் இவரின் விளக்கத்தை ஏற்காகமல் பணியிலிருந்து நீக்கியிருக்கிறது. “ஒன்றரை ஆண்டுகள் நான் இங்கே பணிபுரிந்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன். ஒரு வீடியோவால் என்னை அனுப்பியது நியாயமில்லை” என்கிறார் விளாடிமிர்.

மருத்துவரே, இது நியாயமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x