Published : 16 Jan 2018 09:50 AM
Last Updated : 16 Jan 2018 09:50 AM

உலக மசாலா: அபூர்வமான காட்சி!

கெ

ன்யாவின் மாசை மாரா வனவிலங்குகள் பூங்காவில் ஒளிப்படக் கலைஞர் பால் கோல்ட்ஸ்டீன் எடுத்த படங்கள், பார்ப்பவர்களை உறையச் செய்துவிட்டன. “எனக்கு இப்படி ஒரு காட்சி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளுக்கு இடையே ஒரு சிறுத்தை அமர்ந்திருந்ததைக் கண்டு முதலில் ஆச்சரியத்தில் அப்படியே நின்றேன். பிறகுதான் சுதாரித்துக்கொண்டு படங்கள் எடுத்தேன். முசியாரா என்ற இந்தப் பெண் சிறுத்தை மிகவும் பசியோடுதான் இருந்தது. ஆனால் வேட்டையாடுவதற்குச் சோம்பல் பட்டுக்கொண்டு, அமர்ந்திருந்தது. அப்போது தற்செயலாக இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் வந்து, சிறுத்தையின் இரண்டு பக்கங்களில் நின்றன. தன்னைக் கவனிக்காத ஒட்டகச்சிவிங்கிகளை ஒரு கை பார்க்கலாம் என்று சிறுத்தை தயாரானபோது, ஒட்டகச்சிவிங்கி கூட்டமே வந்துவிட்டது. இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்த சிறுத்தை, அமைதியாக அமர்ந்துவிட்டது. எனக்கு அற்புதமான காட்சிகள் கிடைத்துவிட்டன” என்கிறார் பால் கோல்ட்ஸ்டீன்.

அபூர்வமான காட்சி!

ங்கிலாந்தைச் சேர்ந்த 3 வயது டோட்லர் எட்வர்ட்டின் செல்ல நாய் மோர்ஸ் கடந்த டிசம்பரில் காணாமல் போனது. எவ்வளவோ தேடியும் நாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எட்வர்ட் மனம் உடைந்து போனான். அவனை சமாதானப்படுத்த முடியவில்லை. கிறிஸ்துமஸ் தாத்தாவுக்குக் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றான். அவனின் விருப்பப்படி அவனது அப்பா, ‘டியர் சாண்ட்டா, இந்தக் கிறிஸ்துமஸுக்கு என்னுடைய மிகச் சிறந்த நண்பனான மோர்ஸை கொண்டுவந்து கொடுத்துவிடுங்கள். இதுவே எனக்கான சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு’ என்று எழுதி அனுப்பி வைத்தார். இந்தக் கடிதம் கோடீஸ்வரர் சைமன் கோவெலின் பார்வைக்குச் சென்றது. 3 வயது சிறுவனின் வேண்டுகோள் அவரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே நாயைத் தேடிக் கண்டுபிடித்து கொடுப்பவருக்கு 8.7 லட்சம் ரூபாயை அன்பளிப்பாகத் தருவதாக அறிவித்தார். எட்வர்ட் இருப்பிடத்திலிருந்து 20 மைல் தொலைவில் ஒரு தம்பதி தங்களிடம் ஒரு நாய் இருப்பதாகத் தகவல் கொடுத்தனர். “நாயை யாரோ கடத்திச் சென்றிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து, சகதியோடு ஒருநாள் எங்கள் வீட்டு வாசலில் படுத்திருந்தது. நாயைச் சுத்தம் செய்து, உணவு கொடுத்து கவனித்துவந்தோம். அப்போதுதான் பரிசுத் தொகை அறிவிப்பு வந்தது. தகவல் கொடுத்தோம்” என்கிறார் கென்ட். பணத்தைக் கொடுத்து நாயை வாங்கிய சைமன் கோவெல், நாயைப் படம் எடுத்து எட்வர்ட் முகவரிக்கு அனுப்பி வைத்தார். “எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே கிளம்பினோம். எட்வர்ட்டைப் பார்த்ததும் மோர்ஸுக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. தாவி வந்து அவனை அணைத்துக்கொண்டது. சைமன் கோவெலுக்கு நன்றி கூறியபோதுதான், 8.7 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்து, மோர்ஸைக் கொண்டு வந்து எங்களிடம் சேர்த்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது” என்கிறார் அப்பா ரிச்சர்ட் லாட்டர்.

தொலைந்த நாயைத் திரும்பிவர வைத்த கடிதம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x