Published : 03 Jan 2018 10:54 AM
Last Updated : 03 Jan 2018 10:54 AM

உலக மசாலா: குதிரைகளுக்கும் பிறந்த நாள்!

தா

ய்லாந்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட ஒரு பெண், சமீபத்தில் சில படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். மூக்கு சீர்திருத்தம் செய்வதற்காகக் குறைந்த கட்டணம் கேட்ட ஒரு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். மூக்கில் வைத்த அந்த சிலிக்கான் தகடு எப்படியோ நகர்ந்து இரு புருவங்களுக்கு இடையில் சென்றுவிட்டது. இது பார்வைக்கு நன்றாகப் புலப்படுகிறது. தன் பெயரையோ, சர்ஜரி செய்துகொண்ட மருத்துவமனையின் பெயரையோ வெளியிடாத இந்தப் பெண், “இந்தப் படங்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன் யோசித்துக் கொள்ளுங்கள். குறைவான கட்டணத்துக்கு ஆசைப்பட்டு, என்னைப் போல சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். மருத்துவமனைக்குச் சென்று என் நிலைமையைச் சொல்லி, சரி செய்து தரும்படி கேட்டேன். ஆனால் மருத்துவமனை என்னை நிராகரித்துவிட்டது” என்று சொல்லியிருக்கிறார். “ஏதோ தவறு ஏற்பட்டு நோய்த்தொற்றால் இது நிகழ்ந்திருக்கலாம். அதனால் இவரது உடல் சிலிக்கானை ஏற்றுக்கொள்ளாமல் வெளியே அனுப்பியிருக்கிறது. அந்தப் பெண் விரும்பினால் நாங்கள் இதைச் சரி செய்துவிடுவோம். யாரோ செய்யும் ஒரு தவறால் பிளாஸ்டிக் சர்ஜரியே தவறு என்று நினைத்துவிடக் கூடாது. இலவசமாக அந்தப் பெண்ணுக்கு உதவத் தயாராக இருக்கிறோம்” என்கிறார் ஓர் அறுவை சிகிச்சை மருத்துவர்.

அடக்கொடுமையே…

ங்கிலாந்தில் உள்ள குதிரைகளுக்கு ஜனவரி முதல் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்தப் பிறந்த நாளில் குதிரைகளுக்குச் சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டது. செல்டன்ஹாமில் உள்ள ஜாக்கி க்ளப், குதிரைகளுக்கு வித்தியாசமான முறையில் இந்த ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடியது. மூன்று அடுக்கு வைக்கோலை வைத்து, கேக் போல உருவாக்கியிருந்தனர். இந்த வைக்கோல் கேக் மீது ஆப்பிள்களும் கேரட்களும் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. மேல் அடுக்கில் பெரிய மெழுகுவர்த்தி. குதிரைகளை இந்தப் பிரம்மாண்டமான வைக்கோல் கேக் அருகில் கொண்டு சென்றனர். முதலில் ஆப்பிள்களையும் கேரட்களையும் சுவைத்தன. பிறகு வைக்கோலையும் சாப்பிட்டு முடித்தன!

குதிரைகளுக்கும் பிறந்த நாள்!

லேசியாவைச் சேர்ந்த ஒருவர், வீடியோ கேமுக்காக மனைவியை விவாகரத்து செய்ய இருக்கிறார். சீனாவைச் சேர்ந்த பெண்ணை 4 ஆண்டுகள் காதலித்து, 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இருவரும் மலேசியாவுக்கு குடிவந்தனர். ‘கிங் ஆஃப் க்ளோரி’ வீடியோ கேம் என்றால் கணவருக்கு மிகவும் விருப்பம். ஆரம்பத்தில் கணவருடன் சேர்ந்து மனைவியும் விளையாடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மனைவி விளையாடுவது பற்றி நண்பர்களிடம் குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார் கணவர். இதை அறிந்த மனைவி, வீடியோ கேம் விளையாடுவதை விட்டுவிட்டார். பிறகு ஒரு குழந்தையும் பிறந்தது. நாளுக்கு நாள் கணவருக்கு வீடியோ கேம் மீது இருந்த ஆர்வம் அதிகரித்தது. இரவில் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருப்பார். மனைவி, குழந்தையிடம் நேரம் செலவிடுவதே இல்லை. மனைவி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். கெஞ்சிப் பார்த்தார். ஒருநாள் கோபத்தில் வீடியோ கேம் கணக்கை விற்றுவிட்டார். விஷயம் அறிந்த கணவர் சண்டையிட்டார். விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டார். ‘இப்படிப்பட்ட ஒரு மனிதருடன் இனி வாழ முடியாது, சீனாவுக்குச் சென்று என் மகளை வளர்த்துக் கொள்கிறேன்’ என்று கிளம்பிவிட்டார் மனைவி!

விளையாட்டு வினையாகிவிட்டதே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x