Published : 17 Dec 2017 11:37 AM
Last Updated : 17 Dec 2017 11:37 AM

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு மூன்று பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள துறைமுக நகரமான சிபாடுஜாவில் நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5-ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.

நில அதிர்வை உணர்ந்ததும் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். மிகக் குறைந்த நேரம் மட்டுமே நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து நோயாளிகள் அவற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலநடுக்கத்தில் பெகலோன்கன் பகுதியில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதில் இருந்த 62 வயது முதியவர் உயிரிழந்தார். சியாமிஸ் பகுதியி்ல் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 80 வயது மூதாட்டி ஒருவர் பலியானார். யோக்யகர்டா பகுதியைச் சேந்த 34 வயது பெண்மணி ஒருவரும் கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தார். நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x