Last Updated : 06 Dec, 2017 12:23 PM

 

Published : 06 Dec 2017 12:23 PM
Last Updated : 06 Dec 2017 12:23 PM

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் ட்ரம்ப்: தலைவர்கள் கண்டனம்

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் அறிவிக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கக்கூடாது என்று 'அரபு லீக்' கூட்டமைப்பு மற்றும் பிரான்ஸ், துருக்கி உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை அறிவிக்க இருக்கிறார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், "அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (புதன்கிழமை) ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்க இருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

ஜெருசலேமை ட்ரம்ப் அமெரிக்க தலைநகராக அறிவிக்கும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றங்கள் ஏற்படக்கூடும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்பின் முடிவு குறித்து சவுதி அரசர் சல்மான் கூறும்போது, “இது ஆபத்தான முடிவு. ட்ரம்பின் இந்த முடிவு உலகிலுள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி விடும்”என்று தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் கூறியபோது, "அமெரிக்காவின் முடிவை ஒருபோதும் ஏற்கமாட்டோம். அமைதி முயற்சிகளை அமெரிக்கா சீர்குலைக்கிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 1967-ல் மத்திய கிழக்கு போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் டெல் அவிவ் நகரில் செயல்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்க அரசு தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x