Published : 13 Nov 2017 10:03 AM
Last Updated : 13 Nov 2017 10:03 AM

ஈரான், இராக்கில் பயங்கர நிலநடுக்கம்: 330 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் காயம்

ஈரான், இராக் நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு இதுவரை 330 பேர் பலியாகியுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாலும் மருத்துவமனையில் பலர் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது குர்திஸ்தான் மாகாணத்தின் சுலைமானியா பகுதியில் பெஞ்வின் எனுமிடத்தில் நிலை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம், நிலநடுக்கத்தின் தாக்கம் 7.3 ரிக்டர் எனக் கூறியிருந்தாலும் இராக் அரசோ நிலநடுக்கத்தின் தாக்கம் 6.5 ரிக்டர் எனக் கூறுகிஅது.

மோசமான பாதிப்பு:

இராக் எல்லையை ஒட்டிய கேர்மான்ஷா மாகாணத்தில்தான் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மாகாணத்தின் துணை ஆளுநர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "இடிபாடுகளுக்கு இடையே ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். பலி எண்ணிக்கை உயரக்கூடாது எனவே விரும்புகிறோம் ஆனால் நிலைமையைப் பார்த்தால் அது நிஜமாகதுபோல் தெரிகிறது" என்றார்.

வீதியில் தஞ்சமடைந்த மக்கள்:

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஈரான், இராக்கில் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகள் பல சேதமடைந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சீரான சாலைகள் இல்லாததால் கிராமப்புறங்களுக்கு செல்ல முடியவில்லை அங்கு நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை கணிக்க முடியவில்லை என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x