Published : 03 Nov 2017 09:56 AM
Last Updated : 03 Nov 2017 09:56 AM

உலக மசாலா: பறவைகளைப் பிடிக்கும் மரங்கள்!

ங்கிலாந்தைச் சேர்ந்த டிசைனர் டெப்பி விங்ஹாம் உலகின் விலையுயர்ந்த ஒரு ஜோடி ஷூக்களை உருவாக்கியிருக்கிறார். இந்த ஷூக்களின் விலை சுமார் 97 கோடி ரூபாய்! உலகின் மிகப் பிரபலமானவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் அரசக் குடும்பத்தினருக்கும் விலையுயர்ந்த ஆடைகள், கேக்குகள், ஷூக்கள் போன்றவற்றைச் செய்து கொடுப்பதே டெப்பியின் தொழில். 2 ஆயிரம் வைரக்கற்கள் பதித்த உலகின் விலை மதிப்பு மிக்க உடையை உருவாக்கியிருக்கிறார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த கேக்குகளையும் இவர் ஏற்கெனவே உருவாக்கியிருக்கிறார். தற்போது இந்த ஷூக்களை அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளருக்காகச் செய்திருக்கிறார். “இந்த ஷூக்களைத் தினமும் அணிந்துகொள்ளலாம். இவற்றை உருவாக்குவதற்குப் பல நூறு மணி நேரம் கஷ்டப்பட்டிருக்கிறேன். அரிய இளஞ்சிவப்பு வைரங்களும் நீல வைரங்களும் இதில் பதிக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர 1000 சிறிய வைரக்கற்களும் இருக்கின்றன. ஜிப், சோல் போன்றவை தங்கத்தால் ஆனவை. 24 காரட் தங்க வண்ணத்தைப் பூசியிருக்கிறேன். 18 காரட் தங்க நூலால் தைத்திருக்கிறேன். நான் ஒரு பொருளைச் செய்துவிட்டு விற்பதில்லை. ஆர்டர் கிடைத்த பிறகே அந்த வேலையை எடுத்துக்கொள்கிறேன்.துபாயைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பிறந்தநாள் பரிசுக்காக இந்த ஷூக்களை உருவாக்கியிருக்கிறேன்” என்கிறார் பெப்பி விங்ஹாம்.

விலையைக் கேட்டு யாருக்கும் மயக்கம் வராமல் இருந்தால் சரி!

பி

சோனியா ப்ருனோனியானா என்ற நச்சுக்கொட்டை கீரை மரங்கள் ஹவாயிலிருந்து நியூசிலாந்து வரை காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்குப் பகுதியிலும் இருக்கின்றன. இந்த மரத்தை அருகில் சென்று பார்த்தால், இறந்துபோன பறவைகளின் உடல்களும் எலும்புகளும் தொங்கிக்கொண்டிருக்கும். இந்த மரத்தை ‘பறவை பிடிக்கும் மரம்’ என்று அழைக்கிறார்கள். மரத்திலுள்ள காய்களில் பூச்சிகளை ஈர்ப்பதற்காக பசை போன்ற ஒரு திரவம் சுரக்கிறது. இந்தக் காய்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூச்சிகளைச் சாப்பிடுவதற்காகப் பறவைகள் நாடி வருகின்றன. பறவைகளின் இறக்கைகள் காய்களில் ஒட்டிக்கொள்வதால் அவற்றால் தப்பிக்க முடிவதில்லை. உணவின்றி அப்படியே வெயிலில் காய்ந்து, மடிந்துவிடுகின்றன. ஒருவேளை மரத்திலிருந்து வெளியே வந்தாலும் இறக்கைகளில் விதைகள் கனமாக ஒட்டிக்கொள்வதால் அவற்றால் பறக்க முடிவதில்லை. சில நாட்களில் உணவின்றி உயிரிழந்துவிடுகின்றன. “பறவைகளின் மூலம் பெரும்பாலான தாவரங்கள் பல்வேறு இடங்களில் இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்புகளைப் பெறுகின்றன. ஆனால் நச்சுக்கொட்டை கீரை மரத்தின் விதைகளால் பறவைகள் உயிரிழப்பதால், இவற்றின் இனப்பெருக்கம் பெருகுவதில்லை. மரங்களில் சிக்கியிருந்த பறவைகளை மீட்டு, அவற்றின் இறக்கைகளில் இருந்து விதைகளை அப்புறப்படுத்தினோம். புதிய இறக்கைகள் முளைக்கும் வரை பராமரித்து, பிறகு வெளியே அனுப்பியிருக்கிறோம்” என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த தாவரவியல் ஆய்வாளர் பெத் ஃபின்ட்.

பறவைகளைப் பிடிக்கும் மரங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x