Published : 27 Oct 2017 10:08 AM
Last Updated : 27 Oct 2017 10:08 AM

உலக மசாலா: புயலில் தப்பித்த ஆப்பிள்கள்!

யர்லாந்தில் ஒபிலியா புயல் மிக மோசமான சேதத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால் ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு மட்டும் உதவி செய்திருக்கிறது. இந்த சீசனுக்கு விளைந்திருந்த ஆப்பிள்களைப் பறிப்பது என்பது பல வாரங்களுக்கு செய்ய வேண்டிய கடினமான பணி. ஆனால் ஒபிலியா புயல் ஒரே இரவில் அனைத்து ஆப்பிள்களையும் நிலத்தில் தள்ளிவிட்டது. ஆப்பிள்கள் என்ன ஆகுமோ என்று பயந்திருந்த விவசாயிகள், மறுநாள் தோட்டங்களுக்குச் சென்று பார்த்தபோது மகிழ்ச்சியடைந்தார்கள். மழையில் ஆப்பிள்கள் அடித்துச் செல்லப்படவில்லை. போர்வை விரித்ததுபோல் நிலமே தெரியாதபடி ஆப்பிள்களால் மூடப்பட்டிருந்தது தோட்டம். பழங்கள் எந்தவிதத்திலும் சேதமடையவில்லை.

புயலில் தப்பித்த ஆப்பிள்கள்!

பி

ரிட்டனைச் சேர்ந்த பால் ஃபெர்ரெல் தைவானில் 13 ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஆசிய நாடுகளிலேயே சின்னஞ்சிறு தைவான்தான் தனக்கு மிகவும் பிடித்த நாடு என்று சொல்லிக்கொண்டிருப்பார். திடீரென தைவான் மீதுள்ள அபிமானத்தை எல்லோருக்கும் காட்ட வேண்டும் என்று நினைத்து, நெற்றியிலும் தாடையிலும் டாட்டூ போட்டுக்கொண்டார். அதைப் பார்த்த இவருடைய தைவான் மனைவி, விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டார். பால் ஃபெர்ரெல் ஆஸ்திரேலியாவில் தன்னுடைய மனைவியை சந்தித்தார். இருவரும் காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். மனைவிக்காக தைவானுக்கே வந்துவிட்டார். இங்கே ஒரு மதுபான விடுதி வைத்து நடத்தி வருகிறார். “அன்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் பார்ட்டி. கொஞ்சம் அதிகமாகவே மது அருந்திவிட்டேன். தைவான் சுதந்திரப் போராட்டம் பற்றி பேச்சு வந்தது. அந்த வரலாற்றைக் கேட்டதும் எனக்கு தைவான் மீது மேலும் மதிப்பு கூடிவிட்டது. உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அருகில் டாட்டூ பார்லர் இருந்தது. என்னுடைய சீனப் பெயரையும் தைவானையும் தைவான் விடுதலை கட்சியின் கொடியையும் முகத்தில் வரையும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் நெற்றி நிறைய 2 டாட்டூக்களும் தாடையில் ஒரு டாட்டூவையும் வரைந்துவிட்டார். மறுநாள் பார்த்தபோதுதான் நான் எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியத்தைச் செய்திருக்கிறேன் என்று தெரிந்தது. மது அருந்தாவிட்டால் நிச்சயம் இப்படி ஒரு டாட்டூ வரைந்துகொண்டிருக்க மாட்டேன். என் மனைவிக்கு இது பிடிக்கவில்லை. பயங்கரமாக கோபப்பட்டார். இந்த டாட்டூவை அழிக்கும்படிக் கேட்டேன். மிகப் பெரிய டாட்டூக்கள் என்பதால் அழிப்பது அத்தனை எளிதான காரியம் இல்லை என்கிறார்கள். என்னுடைய ஒளிப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, இதற்கு ஒரு தீர்வு சொல்லும்படி கேட்டுக்கொண்டேன். இந்த விஷயம் என் மனைவியின் கோபத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டது. சண்டை பெரிதாகி, இப்போது விவாகரத்து வரை சென்றுவிட்டார்” என்று வருந்துகிறார் பால் ஃபெர்ரெல். “அவர் போதையில் இருந்தபோது நான் வேண்டுமென்றே இந்தக் காரியத்தைச் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். நான் பலமுறை அவரிடம் கேட்டு, அவருடைய ஒப்புதலுடன்தான் இந்த டாட்டூக்களை வரைந்தேன். எனக்கு வாடிக்கையாளரின் விருப்பம்தான் முக்கியம்” என்கிறார் டாட்டூ கலைஞர். வலி நிறைந்த 10 லேசர் சிகிச்சைகள் மூலம்தான் ஓரளவாவது டாட்டூக்களை அழிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நாட்டுப் பற்றால் பிரிந்த குடும்பம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x