Published : 21 Oct 2017 09:50 AM
Last Updated : 21 Oct 2017 09:50 AM

உலக மசாலா: யானையை அழைத்து வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்!

னடாவைச் சேர்ந்த குதிரைப் பயிற்சியாளர் லிண்ட்சே பார்ட்ரிட்ஜ், செல்லப் பிராணிகள் விடுதிகளில் தங்க அனுமதிக்கும் அமெரிக்க அரசின் கொள்கையைப் பரிசோதிக்க முடிவு செய்தார். கெண்டகியில் உள்ள ஒரு விடுதிக்குத் தன்னுடைய 5 வயது குதிரையை அழைத்துக்கொண்டு சென்றார். விடுதிக்குள் நுழைந்து, தான் ஒரு குதிரைப் பந்தயத்தில் கலந்துகொள்ள வந்திருப்பதாகவும் தனக்கும் குதிரைக்கும் ஓர் அறை வேண்டும் என்றும் கேட்டார். வரவேற்பறையில் இருந்த பெண்கள் ஆச்சரியமடைந்தனர். தன் குதிரை வெளியில் நிற்கிறது என்றும் அறை ஒதுக்க முடியுமா என்றும் மீண்டும் கேட்டார். பிறகுதான் அவர் நிஜமாகவே கேட்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அவருக்கும் குதிரைக்கும் அறை தருவதாகச் சொன்னார்கள். “என்னால் நம்பவே முடியவில்லை. பெரிய குதிரையுடன் சென்றேன். முதல் தளத்தில் எங்களுக்கான அறை கொடுத்தனர். குதிரைக்காக அதிகமாக வாடகை கேட்கவில்லை. 650 ரூபாய்க்கு அறை கிடைத்துவிட்டது. நானும் குதிரையும் விதவிதமாகப் படங்கள் எடுத்துக்கொண்டோம். சாப்பிட்டோம். சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்தோம். பிறகு குதிரையை அழைத்துக்கொண்டு போய் செல்லப்பிராணிகளுக்கான இடத்தில் கட்டி வைத்துவிட்டேன். என்னுடைய நோக்கம் குதிரையை அறைக்குள்ளே வைத்துக்கொள்வது அல்ல. நாய், பூனைபோல் குதிரை சிறிய பிராணி அல்ல. குதிரையால் கழிவறையைப் பயன்படுத்த இயலாது. கழிவைச் சுத்தம் செய்வது கடினம். செல்லப் பிராணிகள் குறித்து அமெரிக்க அரசின் கொள்கை எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைப் பரிசோதிக்கவே இப்படி நடந்துகொண்டேன். ஒரு வார்த்தை கூட மறுப்பு சொல்லாமல் குதிரைக்கு அனுமதி வழங்கியது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். ஒருவாரம் இந்த சுப்ரீம் விடுதியில் தங்கப் போகிறேன்” என்கிறார் லிண்ட்சே. “எனக்கு செல்லப்பிராணிகள் குறித்த அரசாங்கத்தின் கொள்கை கள் எதுவும் தெரியாது. லிண்ட்சே கேட்டவுடன் விளையாடுகிறார் என்று நினைத்துதான், குதிரையுடன் வரச் சொன்னேன். ஆனால் அவர் நிஜமாகவே குதிரையுடன் வந்துவிட்டார். வேறு வழியின்றி அறைக்குள் குதிரையை அனுமதித்தோம். உயர் அதிகாரியைத் தொடர்புகொண்டேன். 11 கிலோவுக்குக் குறைவான செல்லப் பிராணிகளை மட்டுமே அறைக்குள் அனுமதிக்கும்படிச் சொன்னார். நல்லவேளை சில மணி நேரத்தில் குதிரையை வெளியே அனுப்பிவிட்டார்” என்கிறார் விடுதியின் வரவேற்பாளர்.

யானையை அழைத்து வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்!

ப்பானைச் சேர்ந்த 74 வயது யோகிடோமோ ஷிமொட்டை நீண்ட காலமாக காபி தயாரிப்பில் ஈடுபட்டுவந்தார். ஓய்வுக்குப் பிறகு ‘கார்லிக் காபி’ என்ற புதிய சுவையை அறிமுகம் செய்திருக்கிறார். “என் வாழ்நாளுக்குள் ஏதாவது அழுத்தமாக முத்திரைப் பதித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தேன். தற்போது கார்லிக் காபியை உருவாக்கிவிட்டேன். இந்த காபியைப் பருகினால் பூண்டின் சுவையோடு ஏப்பம் வராது. நன்றாகக் கொதிக்க வைத்துவிடுவதால் பூண்டு இனிமையான சுவையாக மாறிவிடுகிறது. இதில் காஃபீன் கிடையாது. அதனால் இரவிலும் பருகலாம். கர்ப்பிணிப் பெண்களும் குடிக்கலாம். எந்த மனநிலையில் இதைக் குடித்தாலும் உடனே புத்துணர்ச்சி கிடைத்துவிடும். ஒரு கோப்பை கார்லிக் காபி 82 ரூபாய்” என்கிறார் யோகிடோமா.

காபியிலும் பூண்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x