Published : 12 Oct 2017 10:53 AM
Last Updated : 12 Oct 2017 10:53 AM

உலக மசாலா: உழைத்துச் சாப்பிடும் காகங்கள்!

 

நெ

தர்லாந்தைச் சேர்ந்த ரூபென் வானும் பாப் ஸ்பிக்மனும் இணைந்து தெருவில் உள்ள சிகரெட் துண்டுகளை சுத்தம் செய்யும் ரோபோட் ஒன்றை உருவாக்கினார்கள். ஆனால் அந்த ரோபோட்டைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் தோன்றின. சாலைகளில் சைக்கிள் போன்ற வாகனங்கள் வராமலும் மனிதர்கள் தவறுதலாக மிதிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் ரோபோட்களுக்கு பதிலாக பறவைகளுக்குப் பயிற்சி அளித்து, பயன்படுத்த முடிவெடுத்தனர். நீண்டகாலமாக புறாக்களை மனிதர்கள் பயன்படுத்தி வந்ததால், அவற்றைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் பயிற்சி அளிக்கும்போதுதான் எவ்வளவு கடினம் என்று புரிந்தது. அதனால் காகங்களுக்குப் பயிற்சியளிக்க முடிவெடுத்தனர். “நெதர்லாந்து ரயில் நிலையங்களில் சிகரெட் துண்டுகளைச் சுத்தம் செய்வதே மிகப் பெரிய வேலை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவே நாங்கள் முயன்று வருகிறோம். இந்த வேலையைக் காகங்களால்தான் மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை நாங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டோம். காகங்கள் புத்திசாலியாக இருக்கின்றன. சுற்றுப்புறத்தை உற்று நோக்குகின்றன. எளிதாக மனிதர்களிடம் நெருங்கிவிடுகின்றன. அதனால் காகங்களை வைத்து மனிதர்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை வந்தது. சில காகங்களுக்கு சிகரெட் துண்டுகளை எடுத்து வந்து, எங்கள் கருவியில் போடும்படி பயிற்சி அளித்தோம். சரியாக அந்தக் கருவியில் சிகரெட் துண்டுகளைப் போட்டால், கருவியிலிருந்து வேர்க்கடலைகள் வெளிவரும். அதைச் சாப்பிட்டுவிட்டு, அடுத்த சிகரெட் துண்டைத் தேடிப் பறக்க ஆரம்பித்துவிடும். இப்படிக் கடலைகளைச் சாப்பிடுவதற்காக சிகரெட் துண்டுகளைத் தேடித் தேடி எடுத்து வருகின்றன. நாங்கள் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக வேலை செய்கின்றன. பொது இடங்களில் சிகரெட் துண்டுகள் குறைந்து வருகின்றன. கொஞ்சம் உணவைக் கொடுத்துவிட்டு, அதிக வேலைகளை வாங்குகிறோம் என்று தோன்றுகிறது. இப்படி சிகரெட் துண்டுகளை எடுத்து வருவதால், காகங்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும். ஒருவேளை காகங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் வேறு வழியைத்தான் நாட வேண்டும்” என்கிறார் ரூபென். உலகம் முழுவதும் சிகரெட் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஓர் ஆண்டில் 6 லட்சம் கோடி சிகரெட்களை மனிதர்கள் புகைக்கிறார்கள்.

உழைத்துச் சாப்பிடும் காகங்கள்!

ண்டனில் வசிக்கிறார் 32 வயது மல்கோர்ஸாடா குல்ஸிக். இவரது கூந்தல் கணுக்கால் வரை வளர்ந்திருக்கிறது. கூந்தலை விரித்தால் அவரே மறைந்துவிடுகிறார். “7 வயதிலிருந்து வளர்க்க ஆரம்பித்த கூந்தலை இதுவரை வெட்டியதில்லை. நுனியில் மட்டும் ஒரே அளவாக அவ்வப்போது வெட்டிக்கொள்வேன். கூந்தலின் நீளத்தையும் நிறத்தையும் பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். குடும்பத்தினரும் நண்பர்களும் தனித்துவமாக இருக்கும் இந்தக் கூந்தலை ஒருபோதும் வெட்ட அனுமதிப்பதில்லை. கூந்தல் வளர்வதற்குப் பிரத்யேகமாக நான் கவனம் எடுத்துக்கொள்வதில்லை. தேங்காய் எண்ணெய் மட்டும் பயன்படுத்துவேன். தலைக்குக் குளித்தால் முடி காய்வதற்கு 4 மணி நேரமாகும். சாலையில் சென்றால் அறிமுகம் இல்லாதவர்கள் கூட என் கூந்தலுக்காக புன்னகை செய்வார்கள். பாராட்டுவார்கள். நீண்ட கூந்தலை நான் எந்த விதத்திலும் தொந்தரவாக நினைத்ததில்லை” என்கிறார் மல்கோர்ஸாடா.

ஆஹா, ரியல் ராபுன்ஸெல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x