Published : 10 Oct 2017 10:12 AM
Last Updated : 10 Oct 2017 10:12 AM

உலக மசாலா: கட்டிடங்களையும் காப்பி அடிக்கக் கூடாது!

னடாவின் டொரோண்டோ நகரில் ஓர் அழகான வீட்டைப் போலவே, பக்கத்து தெருவில் உள்ள இன்னொரு வீட்டைச் சீரமைத்திருக்கிறார்கள். இதனால் அசல் வீட்டுக்காரர்கள், தங்கள் வீட்டின் மதிப்பு குறைந்துவிட்டதாக கூறி ரூ.16 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தார்கள். பார்பரா ஆனும் எரிக் கிரிஷென்ப்ளாட்டும் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜாசன், ஜோடி சாப்னிக் தொடுத்த வழக்குக்காக நிம்மதியிழந்திருக்கிறார்கள். “நாங்கள் எங்கள் வீட்டைக் கட்டும்போது கட்டிட அமைப்பு, வண்ணம் என்று ஒவ்வொன்றையும் பிரத்யேகமாக அமைத்தோம். இதற்காக 7 ஆண்டுகள் உழைப்பையும் பணத்தையும் செலவிட்டோம். இந்த வீட்டைப்போல் இன்னொரு வீடு இந்தப் பகுதியில் இல்லை. எங்கள் வீட்டின் மதிப்பு ஏறிக்கொண்டே இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து தெருவில் ஒரு பழைய வீட்டைப் புதுப்பித்தனர். எங்கள் வீட்டைப் போலவே மாற்றிவிட்டனர். இதனால் எங்கள் வீட்டின் மதிப்பு குறைந்துவிட்டது. எங்கள் கற்பனையில் உதித்த விஷயத்தை அவர்கள் எளிதாக எடுத்துக்கொண்டார்கள். மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அவர்கள் மீது வழக்கு தொடுத்தோம். அதற்கான ஒளிப்பட ஆதாரங்களையும் அளித்தோம்” என்கிறார் ஜோடி சாப்னிக்.

“வெளிப்புறத்தில் ஜன்னல்கள், விளக்குகள், கற்கள் போன்றவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் எங்கள் வீட்டுக்கும் அவர்கள் வீட்டுக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. சில ஒற்றுமைகளுக்காக நாங்கள் நஷ்ட ஈடு தரவேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்? 2015-ம் ஆண்டு புதுப்பித்தவுடன் வாங்கியதைவிட அதிகமாக 2 மில்லியன் டாலர்களுக்கு விற்றுவிட்டோம்” என்கிறார்கள் பார்பராவும் எரிக்கும். இந்த விநோதமான வழக்கை விசாரித்த நீதிமன்றம், இனிமேல் இப்படி யாரும் இன்னொருவருடைய கட்டிட அமைப்பை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டது. நீதிமன்றத்துக்கு வெளியே இரு குடும்பங்களும் சமரச முயற்சியில் இறங்கியிருக்கின்றன. “கட்டிடக் கலைக்கும் காப்புரிமை இருக்கும் என்றும் கட்டிடங்களும் ஒருவிதமான கலை என்றும் நாம் பார்ப்பதில்லை. அதனால்தான் ஒரு வீட்டைப் பார்த்து, இன்னொரு வீட்டை மாற்ற முடிந்திருக்கிறது. இந்த வழக்கு மூலம் மக்களிடம் விழிப்புணர்வு வந்திருக்கும்” என்கிறார் சட்டக் கல்லூரி பேராசிரியர் கேரிஸ் க்ரைக்.

கட்டிடங்களையும் காப்பி அடிக்கக் கூடாது!

சீ

னாவைச் சேர்ந்த 22 வயது கை க்வானுக்கு ஒரு மாதம் முன்பு வரை நீச்சல் தெரியாது. இன்றோ சுமார் 12 மணி நேரம் நீந்திக்கொண்டிருக்கும் வேலையில் இருக்கிறார்! ‘ஆழ்கடல் அதிசய உலகம்’ என்ற பெயரில் மிகப் பிரம்மாண்டமான காட்சியகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் மீன்களோடு மீன்களாக நீந்துவதற்கு கடல்கன்னி ஆடைகளை அணிந்த பெண்கள் வேலைக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். “எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு மாதம் முன்பு வரை நீச்சல் தெரியாது. இன்று ஒருநாளைக்கு 7, 8 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். கடல்கன்னி என்ற கற்பனை கதாபாத்திரம் எல்லோரையும் வசீகரிக்கும். நானே ஒரு கடல்கன்னிபோல் நீந்துவது அற்புதமாக இருக்கிறது” என்கிறார் கை கவான்.

நீந்தக் கற்றுக்கொண்ட கடல்கன்னி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x