Published : 07 Oct 2017 10:21 AM
Last Updated : 07 Oct 2017 10:21 AM

உலக மசாலா: அடடா! 50 ஆயிரம் புத்தகங்களுடன் அட்டகாசமான விடுதி!

போ

ர்ச்சுகலின் ஓபிடோஸ் நகரில் உள்ளது ‘தி லிட்ரரி மேன் ஹோட்டல்’. இங்கு சுமார் 50 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன! 2015-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விடுதி, உலகின் மிகச் சிறந்த விடுதி என்று புத்தகப் பிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 30 அறைகள் கொண்ட இந்த விடுதியில் கூடம், அறைகள், மாடிப் படிகள், சுவர்கள் என்று எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. வசதியான நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. நாவல்கள், கவிதைகள், வாழ்க்கை வரலாறு, சமையல் என்று பல விதமான புத்தகங்கள் இருக்கின்றன. ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால் அதை முடிக்காமல் வைக்க முடியாது. அதற்காக இன்னொரு நாள் தங்கவும் நேரிடலாம். புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிச் செல்லலாம். ஆனால் அதற்கான கட்டணத்தைக் கேட்டால் மயக்கமே வந்துவிடும். “அரிய புத்தகங்கள் என்றால் 35 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கும். எங்கள் அறையில் தங்குவதற்கு ஓர் இரவுக்கு 5,900 ரூபாய்தான் கட்டணம். இன்னொரு நாள் தங்கிப் படித்துவிட்டுச் செல்வது செலவு குறைந்தது. இங்கே வரும் வாடிக்கையாளர்கள் கூட எங்களுக்கு நன்கொடையாகப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறார்கள். அதனால் விரைவில் 1 லட்சம் புத்தகங்களை எட்டி விடுவோம் என்று நம்புகிறோம். எங்களைப் போன்ற விடுதிகள் பல நாடுகளிலும் இருக்கின்றன. ஆனால் நியூயார்க்கில் உள்ள தி லைப்ரரி ஹோட்டலில் 6 ஆயிரம் புத்தகங்களும் போர்ட்லாண்ட், டோக்கியோவில் உள்ள விடுதிகளில் 3 ஆயிரம் புத்தகங்களும்தான் இருக்கின்றன” என்கிறார் விடுதியின் உரிமையாளர்.

அடடா! 50 ஆயிரம் புத்தகங்களுடன் அட்டகாசமான விடுதி!

ன் காதலி ஆன்ட்ரியா காஸ்டில்லாவின் 28-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக லாஸ் வேகாஸ் வந்திருந்தார் டெரெக் மில்லர். இவர்களுடன் ஆன்ட்ரியாவின் தங்கையும் அவரது காதலரும் சேர்ந்து இசை நிகழ்ச்சிக்குச் சென்றனர். இந்த நிகழ்ச்ச்சி முடிந்தவுடன் காதலியிடம் திருமணக் கோரிக்கையை வைப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தார் டெரெக். திடீரென்று துப்பாக்கிக் குண்டுகள் சீறிப் பாய்ந்தன. தங்கையின் கையைப் பிடித்திருந்த ஆன்ட்ரியாவின் உடலையும் தாக்கின. தன் மீது குண்டுகள் விழுந்தாலும் துப்பாக்கிக் குண்டுகளிடமிருந்து தங்கையைக் காப்பாற்றிவிட்டார் ஆன்ட்ரியா. சட்டென்று அவரைத் தூக்கிக்கொண்டு மூவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவசரப் பிரிவில் சேர்த்துவிட்டு, 7 மணி நேரம் காத்திருந்தனர். பிறகுதான் தெரிந்தது மருத்துவமனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்பது. “அக்கா மிகவும் அன்பானவர். இளம் வயதிலேயே எங்கள் அம்மா புற்றுநோயால் இறந்துவிட்டார். ஆனால் அம்மாவுக்கு அந்தவலி தெரியாமல், மகிழ்ச்சியாகப் பார்த்துக்கொண்டார் அக்கா. இப்போதும் தன் உயிரைக் கொடுத்து என்னைக் காப்பாற்றிவிட்டார். டெரெக்கும் நல்லவர். எங்கள் அப்பாவிடம் திருமணத்துக்கு அனுமதி கேட்டிருந்தார்” என்கிறார் ஏதென்னா.

கொடுந்துயரம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x