Published : 26 Sep 2017 10:59 AM
Last Updated : 26 Sep 2017 10:59 AM

உலக மசாலா: இந்தக் காலத்திலும் இப்படிச் சொன்னால் நம்பிவிடுவதா?

மை

க்ரேன் தலைவலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் ‘ஸ்டார் மேஜிக்’ மூலம் குணப்படுத்திவிடலாம் என்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த 39 வயது ஜெர்ரி சார்கியண்ட். இவரிடம் சிகிச்சை பெறுவதற்கு 15 நிமிடங்களுக்கு 7,800 ரூபாய் கட்டணம். 3 மாதங்களுக்கு 4.38 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். தன்னை மருத்துவர் என்று சொல்லிக்கொள்ளாமல், வழிநடத்துபவர் என்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ருமேனியாவில் இவர் சென்றுகொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது. அதில் இரு பெண்கள் இறந்து போனார்கள். அவர்களில் ஒரு பெண்ணின் ஆவி கார் கண்ணாடிக் கதவை ஊடுருவி, இவரது உடலுக்குள் புகுந்துவிட்டது. அதிலிருந்துதான் தனக்கு நோய்களைக் குணமாக்கும் அற்புத சக்தி கிடைத்திருப்பதாகச் சொல்கிறார் ஜெர்ரி. மைக்ரேன், கட்டிகள், பார்வை குறைபாடு என்று இவர் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. அதில் புற்றுநோய்களை அதிக அளவில் குணமாக்கியதாகச் சொல்கிறார். நோயாளிகளை நிற்க வைத்து ஹிப்னாடிசம் செய்கிறார். மயங்கி விழுபவர்களைப் பிடித்து, தரையில் படுக்க வைத்துவிடுகிறார். நோய் இருக்கும் இடங்களில் ஆகாயத்திலிருந்து கிடைக்கும் சக்தியைப் பிடித்து உடலுக்குள் செலுத்துகிறார். அவர்கள் கண் விழிக்கும்போது தங்கள் நோய் குறைந்துவிடுவதாகச் சொல்கிறார்கள். “நான் ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் என்னைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். புற்றுநோய் என்பது செல்களின் அபரிமிதமான பெருக்கம்தான். இதை என்னால் எளிதாகக் கட்டுப்படுத்தி, முற்றிலும் குணமாக்கிவிட முடியும்” என்று தனது இணையதளத்தில் சொல்லியிருக்கிறார். இவர் குறுகிய காலத்தில் ஏராளமானவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டார். பணமும் பெருகியது. தொழிலும் வளர்ந்தது. உலக அளவில் தன் தொழிலைக் கொண்டு செல்ல முயன்றபோதுதான் ஜெர்ரி மாட்டிக்கொண்டார். மருத்துவம் படிக்காத, பயிற்சி பெறாத ஒருவர் நோய்களைக் குணமாக்குவதாகச் சொல்வது ஏமாற்று வேலை என்று புகார் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இரு முறை பெயிலில் வர முயன்றும் அவரால் வர முடியவில்லை. அப்பாவி மக்களின் வாழ்நாள் சேமிப்பைக் கட்டணமாகப் பெற்று, ஏமாற்றிய குற்றத்துக்காகக் கடுமையான தண்டனை அவருக்கு விதிக்கப்பட இருக்கிறது.

இந்தக் காலத்திலும் இப்படிச் சொன்னால் நம்பிவிடுவதா?

மி

ஸ்டர் மாடல் டாபாஸ்கோ 2017 என்ற மிகப் பெரிய ஆண் அழகன்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டி மெக்சிகோவில் முக்கியமானது. இந்த ஆண்டு போட்டிக்கு வந்தவர்களிடம் மாடலிங் ஏஜென்சி எதிர்பார்த்த தன்மைகள் இல்லை. அதனால் போட்டியை ரத்து செய்திருக்கிறார்கள். “இதுவரை இப்படி ஒரு நிலை எங்களுக்கு ஏற்பட்டதில்லை. இந்தப் போட்டி மூலம் சர்வதேச மாடல்களை உருவாக்கி வருகிறோம். 17 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 5 அடி 10 அங்குலம் உயரமும் ஆரோக்கியமான உடலும் மகிழ்ச்சியான முகமும் அவசியம். ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இந்தத் தகுதிகளுடன் இளைஞர்கள் கிடைப்பது இந்த ஆண்டு அரிதாகிவிட்டது. வந்திருந்த போட்டியாளர்களிலிருந்து ஓரளவு தகுதி படைத்த 6 பேரைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் பலருக்கும் அதில் உடன்பாடு இல்லை. போட்டியைக் கைவிட்டுவிடுவது நல்லது என்று முடிவெடுத்தோம்” என்கிறது மிஸ்டர் மாடல் டாபாஸ்கோ ஏஜென்சி.

மாடல்களுக்கு வந்த சோதனை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x