Published : 23 Sep 2017 09:54 AM
Last Updated : 23 Sep 2017 09:54 AM

உலக மசாலா: நேற்று பாத்திரம் தேய்த்தவர், இன்று பிரபல மாடல்!

மெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் உள்ள ஓர் உணவு விடுதியில் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் பணியில் சேர்ந்தார் ரெமிங்டன் வில்லியம்ஸ். 12-வது நாளில் நியூயார்க் பேஷன் வீக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. உடனே நியூயார்க் சென்று, சர்வதேச மாடலிங் ஏஜென்சியின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ரெமிங்டனுக்குப் பயிற்சியளிக்கப்பட்டபோது பல்வேறு மாடலிங் நிறுவனங்கள் அவரை உற்று நோக்கின. இவரது திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்தன. கால்வின் க்லெய்ன் நிறுவனம் தன்னுடைய பிராண்ட் சார்பாக பேஷன் வீக்கில் பங்கேற்க வாய்ப்பு அளித்தது. இதுவரை சிறிய அளவில்கூட மாடலிங் செய்திராத ரெமிங்டனுக்கு ஆரம்பமே பிரம்மாண்டமாக இருந்தது. “மிகச் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவள். கிராபிக் டிசைன் படித்துக்கொண்டே, பகுதி நேரமாகப் பாத்திரம் சுத்தம் செய்யும் பணியில் சேர்ந்தேன். சட்டென்று மாடலிங் வாய்ப்பு கிடைத்துவிட்டது. எத்தனையோ பேர் மாடலிங் வாய்ப்புக்காகப் பயிற்சி எடுத்து காத்திருக்கிறார்கள். ஆனால் மாடலிங் பற்றி ஒன்றும் தெரியாத எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் இன்றுவரை ஆச்சரியமாக இருக்கிறது. ராஃப் சிமோன்ஸ் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எப்படி நடக்க வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று ஒவ்வொன்றையும் அழகாகச் சொல்லிக் கொடுத்தார். அவரால் பிரபல மாடல்களை வைத்து ஷோ நடத்தியிருக்க முடியும். ஆனால் என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புக் கொடுத்ததால், நானும் முழுமையாக ஈடுபாடு காட்டினேன். பேஷன் வீக் முடியும் நேரத்தில் மார்க் ஜேகப்ஸ் நிறுவனத்துக்காக பேஷன் ஷோவில் பங்கேற்கச் சொல்லி அழைப்பு வந்தது. என் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழும் அதிசயங்களைக் கண்டு நான் ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறேன்” என்கிறார் ரெமிங்டன் வில்லியம்ஸ். அடுத்து ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் பேஷன் ஷோக்களில் பங்கேற்க இவருக்கு அழைப்பு வந்துவிட்டது.

நேற்று பாத்திரம் தேய்த்தவர், இன்று பிரபல மாடல்!

ப்

ளோரிடாவில் தன் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்தாள் 4 வயது யான்லி நெல்லி ஸோல்லர். இவளது அப்பாவுக்கு இன்னும் 2 குழந்தைகள் இருந்ததால், தன் பெற்றோரின் பராமரிப்பில் நெல்லியை விட்டிருந்தார். கடந்த வாரம் மிட்டாய் வேண்டும் என்பதற்காகப் பாட்டியின் பையை எடுத்தாள் நெல்லி. அதில் மிட்டாய்கள் இல்லை. ஆனால் அவள் இதுவரை நேரில் பார்த்திராத துப்பாக்கி ஒன்று அவள் கண்ணில் பட்டது. அதைக் கண்டு சுவாரசியமான நெல்லி, கையில் எடுத்துப் பார்த்தாள். அப்போது சட்டென்று துப்பாக்கி குண்டு அவள் மார்பைத் துளைத்துவிட்டது. பாட்டியும் தாத்தாவும் ஓடிவர, அவர்கள் கண் முன்னே நெல்லி உயிரிழந்தாள். மகளை அழைத்துச் செல்வதற்காக ஷேன் ஸொல்லர் வீட்டுக்குள் நுழைந்தபோது அதிர்ந்து போய்விட்டார். காவல் துறை விசாரணை செய்ததில், இது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து என்பதை உறுதி செய்திருக்கிறது.

சே, குழந்தை எடுக்கக்கூடிய இடத்திலா துப்பாக்கியை வைத்திருப்பது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x