Last Updated : 26 Jul, 2017 03:20 PM

 

Published : 26 Jul 2017 03:20 PM
Last Updated : 26 Jul 2017 03:20 PM

ஆப்கனில் தாலிபன்கள் தாக்குதல்: 26 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கான் ராணுவம் அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தானிலுள்ள கத்தஹர் மாகாணத்தில் இன்று (புதன்கிழமை) ராணுவ முகாம் மீது தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் பலியாகினர். 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்கான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘ஆப்கன் ராணுவ வீரர்கள் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து தைரியமாக போரிட்டனர். 80க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x