Published : 21 Jul 2017 09:04 AM
Last Updated : 21 Jul 2017 09:04 AM

மாயமான விமானத்தைத் தேடும்போது பள்ளத்தாக்கு, எரிமலைகளுடன் கடலுக்குள் புது உலகம் கண்டுபிடிப்பு: வரைபடம் வெளியீடு

மாயமான மலேசியா விமானத்தை (எம்ஹெச் 370) தேடும் பணியின் போது கடலுக்குள் புதைந்து கிடக்கும் புதிய உலகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதில் எரிமலைகள், பள்ளத் தாக்குகள் மற்றும் உயரமான முகடுகள் இருப்பது போன்ற வரைபடத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தை (எம்ஹெச் 370) தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடும் பணியில் ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன. இந்தியப் பெருங் கடலின் ஆழ்ந்த பகுதிகளில் அனைத்து விதமான தகவல்கள் அடங்கிய புள்ளி விவரம் சேகரிக் கப்பட்டு, நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

சுமார் 1.20 லட்சம் சதுர கிலோ மீட்டர் தூரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் எந்தத் துப்பும் கிடைக்க வில்லை. இதனால் அந்தப் பணியை மூன்று நாடுகளும் கடந்த ஜனவரி மாதம் கைவிட்டன. தேடுதல் வேட்டையின்போது கடலுக்குள் புதிய உலகம் புதைந்து இருப்பதற்கான வரைபடத்தை தயாரித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இதில் கடலுக்குள் சுமார் 6 கிலோ மீட்டர் அகலம், 15 கிலோ மீட்டர் நீளத்தில் முகடுகளும், 5 கிலோ மீட்டர் அகலம், 1200 மீ்ட்டர் ஆழத்தில் பள்ளத்தாக்குகள் மற்றும் எரிமலைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுபற்றி ஆஸ்திரேலி யாவின் சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ஆய்வுத் தலைவர் ஸ்டூவர்ட் மின்ஷின் கூறுகையில், ‘கடலுக்கு அடியில் மறைந்து கிடக்கும் பகுதிகளைப் பற்றிய தகவல்கள் வருங்காலத்தில் கடல் ஆராய்ச்சிக்கு பெரும் உதவி யாக இருக்கும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x