Last Updated : 28 Nov, 2015 09:26 AM

 

Published : 28 Nov 2015 09:26 AM
Last Updated : 28 Nov 2015 09:26 AM

50 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை: சவுதி அரேபிய அரசு திட்டம்

தீவிரவாதச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள 50-க்கும் மேற்பட்டோ ருக்கு மரண தண்டனை நிறை வேற்ற சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டி லிருந்து வெளிவரும் இரு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள் ளன.

‘ஓகாஸ்’ இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ‘100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 71 பாதுகாப்புப் படை யினர் கொல்லப்பட்ட சம்பவங் களில் தொடர்புடைய 55 பேர் மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்காக காத்துள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய அரசின் அதிகாரப் பூர்வ இதழாகக் கருதப்படும் ‘அல் ரியாத்’ இதழ் இணையதளத் தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘52 பேருக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள் ளது’ என கூடுதல் விளக்கங்களின்றி தெரிவித்துள்ளது.

மரண தண்டனை நிறை வேற்றப்பட உள்ளவர்களில் பலர், அல் காய்தாவுடன் தொடர்புடைய வர்கள் என ஓகாஸ் தெரிவித்துள் ளது. மேலும் சிலர் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் அவாமியா நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள், சமமான உரிமை கோரி போராடி வருகின்றனர்.

மரண தண்டனை செய்தி வெளியானதை அடுத்து, ஷியா பிரிவினர் சாலைகளை முடக்கியும், குப்பை கூளங்களை எரித்தும் அவாமியாவில் பெரும் போராட்டம் நடந்தது.

போராட்டங்களை அடுத்து, ஷியா பிரிவு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட மாட்டாது என அரசு உறுதி யளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவாமியா பகுதியைச் சேர்ந்தவர்கள் மீது தேச துரோகம், பாதுகாப்பு படையினர் மீது தாக்குல் நடத்தியது உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.

சவுதியில் நடப்பாண்டு இது வரை 150-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. இவர்களில் பெரும் பாலானவர்கள் தலைதுண்டித் துக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இது மிக அதிகம்.

ஐஎஸ் அமைப்பு ஆதரவாளர்கள் சவுதியில் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். ஜிகாதி என்ற பெயரில் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே, மரண தண்ட னையை நிறைவேற்ற அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படு கிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x