Last Updated : 28 Jun, 2016 08:27 PM

 

Published : 28 Jun 2016 08:27 PM
Last Updated : 28 Jun 2016 08:27 PM

காற்று மாசால் ஆண்டுக்கு 65 லட்சம் பேர் உயிரிழப்பு: சர்வதேச எரிசக்தி கழகம் எச்சரிக்கை

‘‘காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 65 லட்சம் பேர் உயிரிழக் கின்றனர். இந்த எண்ணிக்கை 2040-க்குள் லட்சக் கணக்கில் அதிகரிக்கும்’’ என்று சர்வதேச எரிசக்தி கழகம் எச்சரித்துள்ளது.

எரிசக்தி மற்றும் மாசுப்பாடு தொடர்பாக சர்வதேச எரிசக்தி கழகம் (ஐஇஏ) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகளவில் ரத்த அழுத்தம், உணவுப் பழக்கம் மற்றும் புகைப் பிடித்தல் ஆகிய 3 காரணிகள் மனித உடல்நலத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கு கின்றன. நான்காவதாக காற்று மாசுபாட்டால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆண்டுதோறும் உலகளவில் 65 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் இறக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வசிப்பிடத்திலும் வெளியிலும் காற்று மாசு அதிகரிப்பதே இறப்புக்கு முக்கிய காரணம். அமிலம், உலோகம், மண், தூசு, சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை காற்றில் அதிகமாக கலக்கும் போது அவை மரணத்தை ஏற்படுத்துகின்றன.

காற்றில் கலந்துள்ள மிகச்சிறிய பொருட்களை சுவாசிப்பதால், நுரையீரல் புற்றுநோய், பக்க வாதம், இதய கோளாறு ஆகியவை ஏற்படுகின்றன.

இந்த எண்ணிக்கை வரும் 2040-ம் ஆண்டுக்கும் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க எரிசக்தி பயன்பாட்டில் மாற்றங்கள் கொண்டு வந்தால்தான் முடியும். எரிசக்தியை நாம் முறையாகவும், கட்டுப்பாடில்லாமலும் பயன்படுத் துவதால் வாழ்நாளில் முன்கூட் டியே மரணங்கள் நிகழ்கின்றன. இதில் ஆசிய நாட்டினர்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

2040-ம் ஆண்டுக்குள் உலகள வில் புகை வெளியிடுதலை குறைக்க நடவடிக்கை எடுத்தாலும், அது போதாது. காற்றின் தரத்தை உயர்த்துவது ஒன்றுதான் இந்தப் பிரச்சினையை தீர்க்கும். புதிய எரிசக்தி, காற்று தர நிர்ணய கொள் கைகளை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் காற்று மாசுபாட்டால் ஏற்படும் இறப்புகளை குறைக்க முடியும்.

இவ்வாறு சர்வதேச எரிசக்தி கழகம் அறிக்கையில் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x