Published : 15 Sep 2014 03:34 PM
Last Updated : 15 Sep 2014 03:34 PM

1850ஆம் ஆண்டிலேயே முதல் செல்ஃபி

இன்று செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிடுவது என்பது மிகவும் சகஜமான ஒரு விஷயமாகியுள்ளது. இதனால் உலகெங்கும் ஆங்காங்கே சில விபத்து மரணங்கள் நிகழ்ந்தாலும் செல்ஃபி இல்லையேல் ஃபேஸ்புக் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் செல்ஃபியை முதன் முதலில் 1850ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்தவர் ஸ்வீடனைச் சேர்ந்த ஆஸ்கர் குஸ்தாவ் ரெஜ்லாண்டர் என்ற கலைப் புகைப்பட நிபுணர். இவர் 'போட்டோமான்டேஜ்' என்ற உத்தியில் நிபுணர்.

இவரது செல்ஃபி சமீபத்தில் வடக்கு யார்க்‌ஷயரில் 70,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது செல்ஃபி, அவரே தயாரித்த ஆல்பம் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆல்பத்தில் 70 படங்கள் இருக்கின்றன. கலைபுகைப்படம் என்ற கலையின் தந்தை என்றே இவர் அழைக்கப்படுகிறார்.

ரெஜ்லாண்டரின் மனைவி ஹாலம் டெனிசன் புகைப்படமும் இந்த ஆல்பத்தில் உள்ளது.

இயற்கை விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் "The Expression of the Emotions in Man and Animals" என்ற படைப்புக்கு ஒத்துழைப்பு அளித்த வகையில் மானுட, விலங்கியல் உணர்வு, செயல் நடத்தை முறை ஆய்வு விஞ்ஞானத் துறையிலும் உளவியல் துறையிலும் ரெஜ்லாண்டர் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் என்ற கலை அதன் மிக ஆரம்பக் காலத்தில் இருந்தபோதே செல்ஃபி எடுத்துள்ளார் ரெஜ்லாண்டர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x