Published : 01 Jan 2014 01:23 PM
Last Updated : 01 Jan 2014 01:23 PM

வின்னி மண்டேலாவாக நடிப்பது கடினமாக இருந்தது: நவோமி ஹாரிஸ்

‘மண்டேலா: லாங் வாக் டு ஃபிரீடம்’ படத்தில், வின்னி மண்டேலாவின் வேடத்தில் நடிப்பதைக் கடினமாக உணர்ந்தேன்” என நவோமி ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

வின்னி மண்டேலாவைப் பற்றி வெவ்வேறு விதமான தாக்கங்களை நான் எதிர்கொண்டேன். அவரைப் பற்றிப் படித்தபோது ஒரு விதமாக வும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுடன் பேசியபோது ஒருவிதமாகவும், இயக்குநர் ஒரு விதத்திலும் உருவகப்படுத்தியதால் எதனை முன்னிறுத்துவது எனத் தெரியவில்லை. அவரைச் சந்தித்த போது, பயமும் பரவசமுமாக உணர்ந்தேன்.

அனைத்துக் கலவைகளையும் ஒருங்கே கொண்ட ஒருவரைப் போல் நடிப்பது சிரமம். எந்தமாதிரி உங்களை வெளிப்படுத்த நினைக்கிறீர்கள் என அவரிடம் கேட்டேன். அதற்கு, நிறைய ஆராய்ச்சி செய்திருப்பீர்கள். எந்த மாதிரி வெளிப்படுத்த வேண்டும் என முடிவு செய்திருப்பீர்கள். உங்களுக்குத் தோன்றும்படி நடியுங்கள் என வின்னி அனுமதித்தார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x