Published : 02 Nov 2015 08:05 AM
Last Updated : 02 Nov 2015 08:05 AM

ரஷ்ய விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது ஐ.எஸ்.

ரஷ்ய பயணிகள் விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக அந்த அமைப்பு சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 224 பேருடன் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக் குப் புறப்பட்ட ரஷ்ய ஏர்லைன்ஸ் விமானம் சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் 224 பேரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து எகிப்து விமான போக்குவரத்து துறை உயரதிகாரி கள் கூறியபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட் டிருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார், அல்-ஆரிஷ் விமான நிலையத் தில் அவர் விமானத்தை தரையிறக்க முயற்சித்தபோது விபத்துக் குள்ளாகி இருக்கிறது என்று தெரிவித்தனர்.

ஆனால் நாங்கள்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரு வதற்கு பழிக்குப் பழியாக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு ஆதாரமாக விமானம் தீப்பிடித்து கீழே விழுவது போன்ற வீடியோவை ஐ.எஸ். அமைப்பு நேற்று வெளியிட்டது. அந்த வீடியோவின் உண்மை தன்மை உறுதி செய்யப்பட வில்லை.

ரஷ்யா மறுப்பு

இதனிடையே ஐ.எஸ். தீவிர வாதிகளின் கூற்றை ரஷ்ய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் மேக்ஸிம் சோகோலாவ் கூறிய போது, 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது ரேடாரில் இருந்து மாயமாகி உள்ளது. அவ் வளவு உயரத்துக்கு ஏவுகணையை செலுத்தும் திறன் ஐ.எஸ். அமைப் பிடம் இல்லை என்று தெரிவித்தார்.

விமானத்தில் வெடிகுண்டு?

பிரிட்டனைச் சேர்ந்த விமான போக்குவரத்து துறை நிபுணர் மைக்கேல் கிளார்க் கூறியபோது, ஐ.எஸ். தீவிரவாதிகளால் 8 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானங்களை மட்டுமே சுட்டு வீழ்த்தும் திறன் உள்ளது. ரஷ்ய விமானம் இரண்டாக உடைந்துள் ளது. எனவே விமானத்தில் வெடி குண்டு வெடித்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

கருப்பு பெட்டிகள் ஆய்வு

இதனிடையே விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பெட்டிகள் எகிப்து தலைநகர் கெய் ரோவுக்கு கொண்டு செல்லப்பட் டுள்ளன. அங்கு ரஷ்யா, பிரான்ஸ், எகிப்து நிபுணர்கள் கருப்பு பெட்டி களை ஆய்வு செய்து வருகின்றனர்.

விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தர விட்டுள்ளார். அதன்படி விபத்து நேரிட்ட பகுதியில் ரஷ்ய விமானப் படையைச் சேர்ந்த நிபுணர்கள் நேற்று நேரில் ஆய்வு நடத்தினர்.

எகிப்தின் சினாய் பகுதி அல்-ஆரிஷ் நகர் அருகே ரஷ்ய பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தின் உடைந்த பாகங்களை நேற்று ஆய்வு செய்த ரஷ்ய விமானப்படை நிபுணர்கள்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x